பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1086

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

parts programmer

1085

Pascal's calculator


இனத்தை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட உறுப்புகள் அனைத்தின் அளவுகள், பெயர்கள், எண்ணிக்கைகள் அடங்கிய ஒரு தொகுப்பு. கணினி உதவிபெற்ற வடிவமைப்பு (Computer Aided Design-CAD) பொறியமைவுகளில் பெரும்பாலானவை இத்தகைய பட்டியல்களை ஒரு வடிவமைப்பு மற்றும் உற்பத்திச் செய்முறையின்போது தானாகவே புதுப்பித்துப் பேணிக் கொள்கின்றன.

parts programmer : உறுப்புச் செயல் முறையாளர் : எந்திர உறுப்பு களுக்கான இயற்பியல் விளக்கங்களைக் கணிதப்படி நிலைகளின் ஒரு தொடர் வரிசையாக மாற்றி அந்தப் படி நிலைகளுக்குக் கணினிக் குறி யீடுகளை வகுத்தமைக்கிற செயல்முறையாளர்.

party check, even : இரட்டைச் சமன் சரிபார்ப்பு.

party line : தொகுப்புக் கம்பித் தொடர்;குழுமக் கம்பி : மையச் செயலகத்திலிருந்து புறப்படும் தனியொரு கம்பியுடன் இணைக்கப்பட்டுள்ள ஏராளமான சாதனங்களைக் குறிக்கும் சொல்.

Pascal : பாஸ்கல் (பாஸ்கல் எனும் கணினி மொழி) : கணினியுடன் தொடர்பு கொள்வதற்கும் சில கணிப்புகளைச் செய்யும் படி அறிவுறுத் துவதற்கும் பயன்படும் உயர்நிலைக் கணினி மொழிகளில் ஒன்று. இது பொது நோக்கத்திற்காக கட்டமைவு செய்யப்பட்ட செயல் முறைப்படுத்தும் மொழியாகும். இதனை சூரிச்சைச் சேர்ந்த நிக்லாஸ் விர்த் (Niklaus wirth) என்பவர் 1968 இல் கண்டுபிடித்தார். பிளைஸ் பாஸ்கல் (Blaise Pascal) என்ற ஃபிரெஞ்சுக் கணித மேதையின் நினைவாக இதற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

Pascal, Blaise (1623-1662) : பாஸ்கல், பிளைஸ் (1623-1662) : ஃபிரெஞ்சுக் கணித மேதை;மேசைக் கணிப்பி வகையைச் சேர்ந்த முதலாவது கூட்டல் எந்திரத்தை 1642இல் கண்டுபிடித்தவர்.

pascaline : பாஸ்கலைன் : 1642 இல் ஃபிரெஞ்சு கணிதவியலார் பிளெய்ஸ் பாஸ்கல் உருவாக்கிய கணிப்பி எந்திரம். அதனால் கூட்டவும், கழிக்கவும் மட்டுமே முடியும். ஆனால் ஐரோப்பாவின் முக்கிய பகுதிகளில் அதன் 50 எந்திரங்கள் அமைக்கப்பட்டதால் அது மிகுந்த கவனத்தைப் பெற்றது.

Pascal's calculator : பாஸ்கல் கணிப்பி : பிளைஸ் பாஸ்கல்