பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1088

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

passive-matrix display

1087

paste


passive-matrix display : முனைப்பிலா அணி காட்சித் திரை : விலை மலிவான தெளிவு குறைவான நீர்மப் படிகத் திரைக்காட்சி (Liquid Crystal Display). காட்சித்திரைக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள மின்மப் பெருக்கிகளால் (Transistors) கட்டுப்படுத்தப்படுகின்ற ஏராளமான திரவப்படிகக் கலங்களை (Cells) கொண்டது. ஒரு மின்மப்பெருக்கி ஒரு முழு நெடுக்கை (Column) அல்லது கிடக்கை (Row) யின் படப்புள்ளிகளை கட்டுப்படுத்தும். முனைப்பிலா அணித்திரைகள் பெரும்பாலும் மடிக்கணினி கையேட்டுக் கணினிகளில் பயன் படுத்தப்படுகின்றன. ஏனெனில், அவை மிகவும் தட்டையாக இருக்கும். ஒற்றைநிற திரைக்காட்சிக்கு இவை தெளிவாக இருக்கும். ஆனால் வண்ணத் திரைக்காட்சி எனில் தெளிவு சற்றுக் குறைவாகவே இருக்கும். அதுமட்டுமின்றி திரையில் நேரெதிர் நோக்கினால்தான் தெளிவாகத் தெரியும். பிற கோணங்களில் பார்த்தால் தெளிவாக இருக்காது. முனைப்பு அணி (Active Matrix) திரைக்காட்சி களில் இக்குறைபாடுகள் கிடையாது. எனினும் முனைப்பிலா அணிக் காட்சித் திரை விலை குறைவானது.

passive star : அசைவற்ற நட்சத்திரம் : கட்டமைப்பு அமைப்பு முறை. கூடுதல் செயலாக்கமின்றி பலமுனைகளின் கம்பிகளை இணைப்பது.

password : அனுமதிச் சொல் உயிர்நிலைச் சொல் : கணினியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட செயல் முறைகளை அல்லது தரவு கோப்புகளை அணுகுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு தனிச்சொல் குறியீடு அல்லது குழூஉக் குறி. ஒரு கணினியமைவில் அடையாளங் காண்பதற்காக வும், பாதுகாப்பு நோக்கத்திற்காகவும் இது பயன்படுகிறது. ஒவ்வொரு பயனாளருக்கும் ஒரு தனிச்சொல் ஒதுக்கப்பட்டிருக்கும்.

password protection : அனுமதிச் சொல் பாதுகாப்பு;அணுகுதல் காலப் பாதுகாப்பு.

paste : ஒட்டு : ஒர் ஆவணத்திலிருந்து முன்னதாக வெட்டி யெடுக்கப் பட்ட தகவலை ஒரு புதிய நிலையில் பொருத்துதல். சில கணினியமை

வுகளில் வாசகத்தின் அல்லது வரைகலையின் பரப்புகளை ஒர் ஆவணத் திலிருந்து வெட்டியெடுத்து பாதுகாத்து பின்னர் இன்னொரு ஆவணத்தில் ஒட்டலாம்.