பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1090

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

path

1089

pause key


கட்டளை அளவில் தேவைப்படும் அதே வடிவம்தான் இது. சிறப்பு இயக்கி யிலிருந்து தொடங்கி பின்சாய்வுக் கோட்டினால் பிரிக்கப்பட்ட துணைப் பட்டியல் எண்களைக் கொண்டதாக இருந்து அஸ்கி"0"எட்டியல் பின்தொடர முடியும். சர நீளத்தின் அதிக அளவு 63 எட்டியல்கள்.

path : பாதை வழி : தற்போதைய விவரக் குறிப்பேடு அல்லாத பிற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விவரக் குறிப்பேடுகளிலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறைவேற்றத்தக்க கோப்புகளைத் தேடியெடுக் கும்படி செயற்பாட்டுப் பொறியமைவுக்கு அறிவுறுத்தப் பயன் படுத்தப்படும் ஒர் நிரல்.

path menu : பாதைப் பட்டி : விண்டோஸ் சூழலில் ஒரு பகிர்வுப் பிணைய வளத்தினை அணுக உலகளாவியப் பெயர் மரபுப்படி அதன் பாதையை உள்ளீடு செய்வதற்குப் பயன் படுத்தப்படும் பட்டி அல்லது கீழ்விரி பட்டியல்.

pathname : பாதைப் பெயர் : ஒரு படிநிலைக் கோப்பு முறைமையில், நடப்புக் கோப்பகத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட கோப்பினை அணுகக் குறிப்பிடப் படும் கோப்பகம்/கோப்புறைப் பெயர்களின் பட்டியல். கோப்பகப் பாதை எனவும் அழைக்கப்படுவதுண்டு. (எ-டு) user\work\project\pay. mdb.

path of execution : நிறைவேற்று வழி.

pattern : தோரணி;தினுசு.

pattern, bit : பிட் தோரணி.

pattern recognition : தோரணிஅடையாளம்;வடிவஅடையாளம்;உருவ மைப்புகாணும் செய்முறைகள்;உருவவகையறிதல் : வடிவங்கள், உருவங்கள், உருவரைகள் போன்றவற்றைத் தானியக்க வழிமுறைகளின்படி அடையாளங் காணல.

patterns : தோரணிகள்.

pause key : நிறுத்தல் விசை;நிறுத்தி வைப்பு விசை;இடை நிறுத்து

விசை : 1. ஒரு நிரல் அல்லது கட்டளையின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் விசை. அனைத்து வகை விசைப்பலகைகளிலும் இத்தகைய விசை உண்டு. ஒரு நீண்ட பட்டியல் திரையில் வேகமாக மேல்நோக்கி உருளும்போது இந்த விசையைப் பயன்படுத்தி நிறுத்தி நிறுத்தி பட்டியலைப் பார்வையிடலாம். 2. குறிப்பிட்ட நிரலில், நிரலர் விருப்பப்படி