பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1091

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pause key

1090

PCB


விசைப்பலகையிலுள்ள ஒரு குறிப்பிட்ட விசையை அழுத்தினால் நிரல்/செயல்பாடு தற்காலிமாக நிற்குமாறு செய்யலாம். குறிப்பாக கணினி விளை யாட்டு நிரல்களில் விளையாட்டை நடுவிலேயே நிறுத்தி வைக்க P என்னும் விசை பயன் படுத்தப்படுவதுண்டு.

pause printing : இடைவிடு அச்சிடல்.

PAX : பேக்ஸ் : Private Automatic Exchange என்பதன் குறும்பெயர். அலுவலகத்திற்குள் உள்ள தொலைபேசி அமைவு. (இணை கட்டுமான விரிவாக்கம் கொண்ட) இணைச் செயலக சூழ்நிலையில் இன்டெல்லின் 860 ரிஸ்க் (Risc) சிப்பின் தரத்தை ஒட்டிய, யூனிக்ஸ் சிஸ்டம் V மற்றும் அல்லையன்ட் கணினியின் இணை மற்றும் முப்பரிமாண (3-D) வரைகலை தொழில் நுட்பங்கள் கொண்டது.

pay to play : பணத்துக்குப் பாட்டு.

payware : பணப்பொருள் : பணத்திற்கு விற்கப்படும் மென்பொருள்.

PBX : பீபிஎக்ஸ் : Private Branch Exchange என்பதன் குறும்பெயர். அலுவலகத்தின் உள்ளே தொலைபேசி அமைக்கும் திட்டம். அங்குள்ள ஒவ்வொரு. தொலைபேசி இணைவுகளுடன் இணைக்கப்படுவது மட்டுமல்லாது வெளிப்புற தொலைபேசி கட்டமைப்புடனும் இணைக் கப்படும். குறைந்த செலவில் வெளிப்புற அழைப்பை அனுப்புதல், அழைப்பை மேலனுப்புதல், மாநாட்டு அழைப்பு மற்றும் அழைப்பு கணக்கிடல் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது.

PC : பீசி : சொந்தக் கணினி (Personal Computer) சட்டைப்பைக் கணினி (Pocket Computer), கையடக்கக் கணினி (Portable Computer), அச்சிட்ட மின்சுற்று வழி (Private Circuit), செயல் முறை மேடை (Programme Counter) ஆகியவற்றின் குறும்பெயர்.

PCB : பீசிபி;அச்சிணைப்பு அட்டை : அச்சிட்ட மின்சுற்று வழிப்பலகை என்று பொருள் படும்"Printed Circuit Board"என்ற ஆங்கிலச் சொற்றொட ரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இந்தப்பலகை, பிளாஸ்டிக்கினாலானது. இதில் கணினியின் பல்வேறு மின்னனுவியல் அமைப்பான்கள் பற்றவைத்து இணைக்கப்பட்டிருக்கும். இவை, இப்பலகையின் மேற்பரப்பில் பதிக்கப்பட்டுள்ள ஒன்றோ