பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1095

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

PC Network

1094

PC tools deluxe


கொண்டிருக்கும். ஒரு சிறிய மின்கலனால் தரவுவைக் காப்பாற்றி வைக்கும். கணினிக்குக் கூடுதல் ரேம் நினைவகம் தருவதற்கென வடிவமைக்கப் பட்டது.

PC Network : பீசி இணையம் : ஐ. பி. எம். மின் கட்டமைவு மற்றும் ஐ. பி. எம். ஏற்புடை பீ. சி-க்களுக்கான இணையம் எந்தவகையான தனிநபர் கணினிகளின் கட்டமைப்பு. ஐ. பி. எம். நிறுவனத்தின் முதல் பீசி லேன் 1984இல் அறிமுகப் படுத்தப்பட்டது. சி. எஸ். எம். ஏ. சி. டி எண்முறையைப் பயன்படுத்தி நெட்பயாஸ் இடை முகத்தை அறிமுகப்படுத்தியது. அடையாள வளைய கட்டமைப்பு ஆதரவு பின்னர் சேர்க்கப்பட்டது. இதன் மைக்ரோ சாஃப்ட் வடிவம் எம். எஸ். நெட் என்று அழைக்கப்படுகிறது.

P-code : பீ-குறியீடு : ஒர் ஆதாரக் குறியீட்டினை ஒரு தொகுப்பி மூலம் பீ-குறியீடு எனப்படும் ஒர் இடையீட்டுக் குறியீடாக மாற்றக்கூடிய உத்தி. இது பிறகு ஒரு தாய் எந்திரத்தின் மீதுள்ள ஒரு தனிவகை பீ. குறியீட்டு மொழிபெயர்ப்பி மூலமாக, நிறைவேற்றத்தக்க இலக்குக் குறியீட்டினைப் பெறுவதற்குப் பயன்படுத்தப் படுகிறது. பாஸ்கல் மொழியின் பல்வேறு வடிவங்கள் இந்த பீ. குறியீட்டினைப் பயன் படுத்துகின்றன.

PC Paintbrush : வண்ணத்தூரிகை : இசட் சாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் உருவாக்கிய பீசி வண்ண மடிக்கும் நிரல் தொடர். பரவலாகப் பயன் படுத்தப்பட்டது. வரைகலை படிவத்திற்கு துறையின் தர நிருணயத்தை உருவாக்கியது. அதன் பீசி எக்ஸ் ராஸ்டர் வரைகலை வடிவம் பல வரை கலை அமைப்புகள் சொல் செயலாக்க மற்றும் மேசைமேல் பதிப்பக நிரல் தொடர்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

PCT : பீசிடீ : நிரலைப் புரிந்து கொள் கருவி எனப் பொருள்படும் Programme Comprehension Tool என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். இது ஒரு மென்பொருள் பொறிநுட்பக் கருவியாகும். கணினி நிரல்களின் புரிதல் மற்றும்/அல்லது செயல்படு தன்மை ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வழி வகுக்கும்.

PC tools deluxe : பீசி டூல்ஸ் டீலக்ஸ் : சென்ட்ரல் பாயின்ட் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் பீசி பயன்பாடுகளுக்கான ஒட்டு