பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1097

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

PD-CD drive

1096

ΡDΜ


கொண்டுள்ளன. ஆனால் சிலவற்றில் பேனா தவிர தொட்டச்சு செய்யக்கூடிய மிகச்சிறிய விசைப்பலகையும் சேர்த்துப் பயன்படுத்தப்படுகின்றன. தரவுவைச் சேமித்து வைக்க, மின்சாரம் அதிகம் தேவைப்படும் வட்டு இயக்க கங்களுக்குப் பதிலாக பளிச்சிடு நினைவகத்தைக் (Flash Memory) கொண்டுள்ளன.

PD-CD drive : பீடி-சிட் இயக்கம் : அழித்தெழுது குறுவட்டு இயக்ககம் எனப் பொருள்படும் Rewriteable Disc-Compact Disc Drive என்பதன் சுருக்கம். இது ஒரு சேமிப்புச் சாதனம். ஒரு குறுவட்டு இயக்ககமும், இணைக்கப்பட்ட ஒன்று. அழித்தெழுது ஒளிவட்டுப் பேழைகளில் 650 மெகாபைட் வரை தரவுவைச் சேமிக்க முடியும்.

PDD : பீடிடி : கையாளத்தகு இலக்க முறை ஆவணம் என்று பொருள்படும் Portable Digital Document என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மேக் ஓஎஸ் இயக்க முறைமையில் குவிக்டிரா ஜிஎக்ஸ் மென்பொருளில் உருவாக்கப்பட்ட ஒரு வரைகலைக் கோப்பு. இக்கோப்புகள், அச்சுப்பொறியின் தெளிவு சாரா வடிவமைப்பில் சேமிக்கப்படுகின்றன. பயன்படுத்தப்படும் அச்சுப்பொறியின் உச்ச அளவு தெளிவு நிலையில் அச்சிடப்படுகின்றன. ஆவணத்தில் பயன்படுத்தப்பட்ட மூல எழுத்துருக்களை அப்படியே அச்சில் பெறலாம். எனவே பீடிடி ஆவணங்களை அவை உருவாக்கப்பட்ட கணினி அல்லாத பிற கணினிகளிலும் அச்சிட முடியும்.

.pdf : . பீடிஎஃப் : அடோப் சிஸ்டம்ஸ் உருவாக்கிய கையாளத்தகு ஆவண வடிவாக்க (Portable Document Format) முறையில் குறியாக்கம் செய்யப்பட்ட ஆவணங்களை அடையாளம் காட்டும் கோப்பு வகைப்பெயர். (file extension) ஒரு பிடிஎஃப் கோப்பினை திரையில் பார்வையிட அல்லது அச்சிட, அடோப் அக்ரோபேட் ரீடர் என்னும் இலவச மென்பொருள் உள்ளது.

PDM : பீடிஎம் : "துடிப்புக் கால ஏற்ற இறக்கம் எனப்பொருள் படும்"Pulse Duration Modulation" என்ற ஆங்கிலச் சொற்றொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இந்தத் துடிப்புக் கால ஏற்ற இறக்கத்தில், ஒரு துடிப்பின் கால நீட்சியானது மாறுபடுகிறது. இது"பீஏஎம்" (Pam), "பீபீஎம்" (PPM) என்பவற்றுக்கு

வேறுபட்டது.