பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1098

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

PDP

1097

peek-a-boo system


PDP : பீடிபீ : ஒரு வகைக் கணினி. டிஜிட்டல் எக்யூப் மென்ட் கார்ப்பரேஷன் (Digital Equipment Corporation) என்ற அமைவனம் தயாரிக்கும் கணினிகளின் பெயர்.

PDS : பீடிஎஸ் : 1. நேரடி செயலிக் செருகுவாய் எனப் பொருள்படும் Processor Direct Slot என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மெக்கின்டோஷ் கணினிகளில் மையச் செயலகத்தின் சமிக்கைகளோடு நேரடியாக இணைக்கக் கூடிய விரிவாக்கச் செருகுவாயைக் குறிக்கிறது. ஒரு கணினியில் செயல்படும் மையச்செயலியைப் பொறுத்து பல்வேறு எண்ணிக்கையிலான பின்கள் மற்றும் பல்வேறு சமிக்கைத் தொகுதி கொண்ட பல்வேறு வகை பீடிஎஸ் செருகுவாய்கள் உள்ளன. 2. இணைநிலை தரவு கட்டமைப்பு என்று பொருள்படும் Parallel Data Structure என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறுக்கம். ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினி களில் மூலக்கோப்பகத்தில் (Root Directory) மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பு. ஆப்பிள் ஷேர் நிரலின்கீழ் பகிர்ந்து கொள்ளப்படும் கோப்பு இது. பல்வேறு கோப்புறைகளின் அணுகு சலுகைத் (Access Privilege) தரவுவைக் கொண்டிருக்கும்.

. pe : . பீஇ : ஒர் இணைய தள முகவரி பெரு நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

peak load : உச்சச் சுமை.

peak volume : உச்ச ஒலி அளவு.

. pe. ca : . பீஇ. சிஏ : ஒர் இணைய தள முகவரி கனடா நாட்டின் பிரின்ஸ் எட்வார்டு தீவுகளைச் சார்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

pedagogical development : கற்பித்தல் நெறிமுறை.

PEEK : கூர்நோக்கு : கணினியின் செயல்முறைப்படுத்தத்தக்க நினை வகத்தில் அமைவிடம் எதனையும் கூர்ந்து நோக்கு வதற்குச் செயல் முறையாளரை அனுமதிக்கிற கணினி மொழி நிரல்.

peek-a-boo system : துளைகாண் முறை : அட்டைகளை ஒன்றன்மேல் ஒன்று அடுக்கி வைத்து அவற்றிலுள்ள ஒரு படித்தான அமைவிடங்களில் துளைகள் இருக்கின்றனவா,