பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

associated document

109

athoring system standard


பது மற்றும் உறுதி செய்யும் கடிதங்களை வாடிக்கையாளர் களுக்கு அனுப்புவது போன்ற பல தணிக்கைப் பணிகளைச் செய்யும் சிறப்பு நிரல் தொடர்கள்.

audit trail : தணிக்கைச் சோதனை : தணிக்கைத் தடம் : ஊடகங்களைக் கொண்டு தரவுச் செயலாக்கத்தின் அனைத்து நிலைகளையும் தேடுதல். மூல ஆவணத்தில் அது இடம் பெறுவதில் துவங்கி இறுதி ஆவணமாக வெளிவரும் வரை அனைத்துச் சோதனைகளும் செய்யப்படும்.

AUI cable : ஏயுஐ வடம் : 'உடனிணைப்புச் சாதன இடை முகக் கம்பி வடம்' என்ற பொருள்தரும் Attachment Unit interface Cable என்பதன் சுருக்கம். ஓர் ஈதர்நெட் பிணையத்துடன் ஒரு கணினியின் தகவியை (adapter) இணைக்கும் அனுப்பிப் பெறும் வடம்.

authenticate : சான்றுறுதிப் படுத்து.

authentication : சான்றுறுதி : அங்கீகாரமளித்தல் : ஒரு சிறு தகவல் சரிதானா என்பதைச் சோதித்துப் பார்க்கும் செயல்முறை.

authenticity : நம்பகப்பண்பு : தகவல் ஒன்றின் நம்பகத் தன்மை.

author : படைப்பாளி : ஆசிரியர் : கணினி வழிக் கற்றலுக்குப் பாடப் பொருளை உருவாக்குபவர்.

authoring : படைப்பாக்கம்.

authoring language : படைப்பாக்க மொழி : கணினி வாயிலாகக் கற்பிக்கப்படும் பாடங்களையும், தரவுத் தளங்கள் மற்றும் நிரல் தொகுப்புகளையும் உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கணினி மொழி அல்லது பயன்பாட்டு உருவாக்க முறைமை. நுண் கணினி பணித்தளம் பொறுத்தவரை, பலரும் அறிந்த எடுத்துக்காட்டு, பாடங்களை உருவாக்கப் பயன்படும் பைலட் (PILOT) மொழியாகும்.

authoring system : படைப் பாக்க முறைமை : படைப்பாக்க மொழி ஒன்றினை செயல்படுத்தும் திறன் கொண்ட கணினி முறைமை.

authoring system standard : படைப்பாக்க முறைமைத் தரம் : படைப்பாக்க நிரலைச் செயல் படுத்தும் திறனுள்ள கணினி அமைப்பு. கற்றுக் கொள்ளவும், சிபிடீ நிரலை உருவாக்கவும் அனுமதிக்கும் மென்பொருள்.