பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Pen Plotter

1099

Pentium


லாக பேனா (எழுத்தாணி) பயன்படுத்தப்படுகிற கணினி வகை. பேனாக் கணினி பெரும்பாலும் மிகச்சிறியதாக கையடக்கமான சாதனமாக இருக்கும். எல்சிடி திரை போன்ற குறைகடத்தி அடிப்படையிலான தட்டை வடிவ திரை யகம் கொண்டவை. பேனா உள்ளிட்டுச் சாதனத்தில் பணி யாற்றுவதற் கென்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தனியான இயக்க முறைமையில் செயல் படும். அல்லது இத்தகு சிறப்புப் பயன் சாதனத்துக் கென்றே உரு வாக்கப்பட்ட தனிப்பட்ட இயக்க முறைமையில் செயல்படும் சொந்த இலக்கமுறைத் துணைவர்கள் (Personal Digital Assistants) எனப்படும் நவீன கணினி வகையின் முன்னோடி மாதிரிகளாக பேனாக் கணினிகள் விளங்குகின்றன.

Pen Plotter : பேனா வரைவி : பார்க்க : வரைவி (Plotter), முரசு வரைவி (Drum Plotter) இது, நிலை மின்னியல் வரைவிலிருந்து (Electrostatic Plotter) வேறுபட்டது.

penpoint : பென்பாயுன்ட் : கோ கார்ப்பரேஷன் உருவாக்கிய இயக்க அமைப்பு. கையால் எழுதும் உள்ளிடுக்கு இடைமுகத்தை அறிவது. டாஸ் ஏற் புடை கோப்பு அமைப்பை அது பயன்படுத்துகிறது. ஆனால் டாஸ் பயன்பாடுகளை ஏற்பதில்லை. எழுதுபவரின் பேனா வீச்சுகளின் போக்கு, வேகம் மற்றும் ஒழுங்கு ஆகியவை ஆராய்ந்து ஏற்கப்படுகின்றன.

pentium : பென்டியம் : மார்ச்சு 1993இல் இன்டெல் நிறுவனம், இன்டெல் ஐ486 செயலிக்கு வாரிசாக அறிமுகப்படுத்திய புதிய நுண்செயலி. சிஸ்க் (CISC) அடிப்படையிலான நுண்செயலி. 33 இலட்சம் மின்மப் பெருக்கிகளைக் கொண்டது. 32 பிட் (துண்மி) முகவரிப் பாட்டை, 64 பிட் (துண்மி) தரவு பாட்டை, உள்ளிணைக்கப் பட்ட இரண்டு 8. கேபி நிலை-1 (L1) இடை மாற்றகம் ஆகியவை கொண்டது. முறைமை மேலாண்மைப் பாங்கு உண்டு. இதன்மூலம் கணினி மையச் செயலகம் தொடர்பிலாப் பணி செய்யும்போதும் எப்பணியுமின்றி வாளா இருக்கும்போதும் சில முக்கிய கணினி உறுப்புகளை மெதுவாக இயக்க அல்லது நிறுத்திவிட நுண்செயலியால் முடியும். தரவு நம்பகத்தன்மை, செயல்பாட்டு மிகைமைச் சரிபார்ப்பு ஆகிய வசதிகளும் உள்ளிணைக்கப்பட்டுள்ளன.