பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Pentium Pro

1100

performance monitor


Pentium Pro : பென்டியம் புரோ : நவம்பர் 1995இல் இன்டெல் வெளியிட்ட 150-200 மெகா ஹெர்ட்ஸ் வேக 32 பிட் (துண்மி) செயலிகளின் குடும்பம். 8086 குடும்பச் செயலிகளின் அடுத்த தலைமுறை செயலிகளாகப் பென்டியம் புரோ விளங்கியது. பென்டியம் செயலிகளின் அடுத்தகட்ட வளர்ச்சி ஆகும். 32 பிட் (துண்மி) இயக்க முறைமைகளும் பயன்பாடுகளும் இதில்செயல் படும். இந்த வரிசையில் அண்மைக்காலத்தில் வெளியிடப்பட்டுள்ள செயலி பன்டியம் 4 ஆகும். 1. 7 GHz வேகத்தில் செயல்படுகிறது.

pentium upgradable : பெண்டியமாய் மேம்படுத்தத்தகு : 1. பென்டியம் வகைச் செயலியைப் பொருத்த முடிகிற ஐ486 தாய்ப் பலகை, 2. பென்டியம் செயலி பொருத்தி பென்டியம் வகை பீசியாய் மேம்படுத்த முடிகிற 486பீசி.

peopleware : அலுவலாளர்கள்;மனித வளம் : செயல்முறைகளை வடிவமைத்தல், கணினிச் சாதனங்களை இயக்கிப் பேணி வருதல் போன்ற பணிகளைச் செய்கிற அலுவலர்கள்.

pepper board : மிளகு அட்டை : நெம்பர் நைன் கம்ப்யூட்டர் கார்ப்பரேசன் உருவாக்கிய பீசி-க்களுக்கான வரைகலை காட்சி அட்டைகளின் குடும்பம். கேட் (CAD) மற்றும் உயர் வரைவு வரைகலை பயன்பாடுகளுக்குத் தேவைப் படும் அதிகத் தெளிவான உருவங்களை வழங்குகிறது.

perfective : முழுமையாக்கல்.

perforator : துளையிடு விசை;துளைப்பி : காகித நாடாவில் துளையிடு வதற்கான விசைச் சாதனம்.

perform : நிறைவேற்று;செயலாற்று : ஒரு கணினியில் நிரல்களை நிறைவேற்றுதல்.

performance : நிறைவேற்றத் திறன்;செயலாற்றல் : ஒரு பொறியமைவின் மொத்த உற்பத்தித் திறனை அறுதியிடுவதற்கான முக்கியக் காரணி. இது பெரும்பாலும், அணுகு வசதி, வெளிப்பாடு, நிறைவேற்றக் காலம் ஆகிய வற்றின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.

performance monitor : செயற்பாட்டு முகப்பு;நிறைவேற்ற அறிவிப்பி; செயலாற்றல் கண்காணிப்பி : ஒரு கணினியினால் நிறைவேற்றப்படும் பணிகளின் அளவுகளைக் கண்காணித்துக் காட்டும் செயல்முறை.