பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

perfory

1101

peripheral equipment


perfory : துளைப்பட்டை : விசிறி மடிப்புக் கணினிக் காகிதத்தின் இரு பக்கங்களிலும் உள்ள, பிரித்தெடுக்கத்தக்க துளையிட்ட பட்டைகள்

perts : துளைகள் : குண்டுசி ஊட்டு விளிம்புகளை அகற்றி விட்டு தொடர் காகிதத்தை தனித்தனிப் பக்கங்களாகக் கிழித்தெடுப்பதற்கு உதவக் கூடிய துளைகள்.

period : காலம்;நேரம் : ஒர் அதிர்வலை ஒரு முழுசுழற்சிக்கு எடுத்துக் கொள்ளும் நேரம். ஒர் அதிரும் மின்அலையில் திரும்ப நிகழ்வுகளுக்கு இடையே உள்ள காலஇடவெளி. f என்பது அதிர்வின் அலைவுஎண் (ஹெர்ட்ஸில்), t என்பது நேரம் (வினாடியில்) எனில், t=1/f ஆகும்.

periodic reports : காலமுறை அறிக்கை : பயன்படுத்துவோருக்கு ஒழுங்கான முறையில் தகவல்களை அளிக்கிற அறிக்கை.

period, retention : தக்கவைப்புக் காலம்.

Peripheral : வெளிப்புற;சுற்றப்பட்ட;வெளிப்பட்ட : கணினியுடன் இணைக்கப்படும் முகப்பு, விசைப்பலகை, அச்சுப் பொறி, பிளாட்டர், வட்டு அல்லது நாடா இயக்கி, வரைகலை டேப்லெட், ஸ்கேனர், ஜாய்ஸ் டிக், பேடில் மற்றும் சுட்டி எந்த ஒரு வன்பொருள் சாதனமும்.

peripheral device : வெளிப்புறச் சாதனம் : ஒரு கணினி அமைப்பால் மையச் செயலகத்தைத் தவிர்த்த வெளிப்புற தகவல் தொடர்பினை வழங்கும் எந்த ஒரு கருவி அலகும், மையச் செயலக அல்லது அமைப்புப் பெட்டியின் வெளிப்புறத்தில் இணைக்கப்படுவதால் அவற்றை வெளிப்புறச் சாதனங்கள் என்று அழைக்கிறோம்.

Peripheral equipment : புற நிலைக் கருவி;புறநிலைச் சாதனம் : ஒரு கணினியமைவில் மையச் செயலகத்திலிருந்து வேறுபட்டுள்ள புறநிலைச் செய்தித் தொடர்புக்கு வசதி செய்து கொடுக்கிற சாதனங்களின் ஒர் அலகு. மைய செயலகத்தின் புறப்பகுதியுடன் இணைக்கப்பட்டிருப்பதால் இவை "புறநிலைச் சாதனங்கள்"எனப்படுகின்றன. எடுத்துக் காட்டு : உட்பாட்டு/வெளிப் பாட்டு அலகுகள்;துணைச் சேமிப்பு அலகுகள்;அட்டைப் படிப்பி தட்டச் சுப்பொறி, வட்டுச்சேமிப்பு அலகு.

peripheral equipment operator : புறநிலைச் சாதன இயக்குநர் :