பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

persistent data

1104

Personalized form letter


persistent data : நிலைத்த தரவு : தரவுத் தளத்திலோ, நாடா போன்ற சேமிப்புச் சாதனங்களிலோ ஒருமுறை பதியப்படும் தரவு அடுத்த முறை அணுகும்போது அழிந்து விடாமல் நிலைத்திருத்தல்.

persistent storage : நிலைத்த சேமிப்பு : 'ரோம் (ROM) போன்ற நினைவகச் சேமிப்புச் சாதனங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்ட பின்னும் அழிந்துவிடாமல் காப்பாற்றப்படும் தரவு.

personal and personality interview : நேரடி மற்றும் ஆளுமைக்கான நேர்காணல்.

personal communication : தனி வழி தகவல் தொடர்பு.

Personal computer : சொந்த கணிணி;தனிமுறைக் கணிணி : நியாயமான விலையில் கிடைக்கும் நுண்கணினியமைவு. இது சொந்தப் பயன்பாட்டுக்கு உரியது. வணிகப் பயன் பாட்டுக்கு உரியதன்று.

Personal computing : சொந்த கணினி முறை : தரவுகளைப் பெறுதல் அல்லது பதிவு செய்தல் போன்ற பயன்பாடு களுக்காகத் தனிநபர்கள், ஒரு சொந்தக் கணிணியை-பொது வாக ஒரு துண்கணினியைப் பயன்படுத்துதல். இது பெரும்பாலும் தானியங்கி விரைவுக் காசாளர் எந்திரங்களுடன் (Automatic Teller Machines) பயன் படுத்தப்படுகிறது.

personal finance manager : சொந்தக் கணக்கு மேலாளர் : பணம் கொடுத்த ரசீதுகள், காசோலைகள் போன்ற எளிய வரவு-செலவுக் கணக்கு வைப்புப் பணிகளுக்கு உதவுகின்ற ஒரு மென்பொருள் பயன் பாட்டுத் தொகுப்பு.

personal form letter : தனியாள் படிவக் கடிதம்.

Personal identification number : தனியாள் அடையாள எண்.

Personal Information Manager (PIM) : தனி நபர் தகவல் மேலாளர் (பிஐஎம்) : சொற்பகுதி, எண் தரவு ஆகியவற்றை குறிப்புகள், பட்டியல்கள் குறிப்புரைகள் மற்றும் பலதரப்பட்ட பிற வகைகளில் இறுதிப்பயனாளர்கள் சேமித்து ஒழுங்குபடுத்தி, திரும்பப் பெறுவதற்கான மென்பொருள் தொகுப்பு.

Personalized form letter : உருப்படிவக் கடிதம் : ஒரு சொல் செய் முறைப்படுத்தும் பொறியமைவினால் அல்லது ஒர் இணைப்பு அச்சடிப்புச் செயல்முறை யினால் கணினிவழி உருவாக்கப்பட்ட படிவக் கடிதம்.