பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

personal video recorder

1105

PET computer


personal video recorder (PVR) : தனியாள் ஒளிக்காட்சிப் பதிப்பி.

Personal Workstation : தனிநபர் பணி நிலையம் : தனிநபர் கணினி அல்லது பணி நிலையங்கள் போன்றதே.

perspective view : தொலையணிமைக் காட்சி : கணினி வரைகலையில் பொருள்களை முப்பரிமாணத்தில் (உயரம், அகலம், ஆழம்) காட்டும் ஒரு காட்சிமுறை. ஆழத்தன்மையை விருப்பப்படும் அளவுக்கு அமைத்துக் கொள்ளும்முறை. மனிதக் கண்களுக்கு ஒர் உண்மையான காட்சியைக் காண்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

PERT : பெர்ட் : திட்ட மேலாண் முறை : செயல்முறை மதிப்பீடு மற்றும் மறு ஆய்வு உத்தி என்று பொருள்படும்Programme Evaluation and Review Techniqueஎன்ற ஆங்கிலச் சொற்றொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது, ஒரு செய்முறையின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தேவைப்படும் காலவரம்பினையும், ஒவ்வொரு நடவடிக்கையின் முடிவுக்கும், அடுத்து வரும் நடவடிக்கையின் செயலுக்குமிடையிலான தொடர்புகளையும் பகுப்பாய்வு செய்வதை உள்ளடக்கிய நீண்ட காலப் பேரளவுத் திட்டங் களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு மேலாண்மை உத்தி.

PERT chart : பெர்ட் வரைபடம் : காலத்திற்கு எதிரான பணிக் கூறுகளின் கூட்டுச் சார்புடைமைகளைக் குறிக்கும் வரை படம். இது வட்டங்களாகவும், இணைப்புக் கோடுகளாகவும் வரைகலை முறையில் காட்டப் பட்டிருக்கும்.

peta : பீட்டா : ஒரு குவாட்ரில்லியனைக் (1010) குறிக்கும். P என்ற எழுத்தால் குறிப்பர். 2-ஐ அடியெண்ணாகக் கொண்ட இரும எண் முறையில் பீட்டா என்பதன் மதிப்பு 1, 122, 899, 906, 842, 624 ஆகும். இரண்டின் அடுக்காகக் கூறுவதெனில் 230எனலாம்.

petabyte : பீட்டாபைட் : PB என்ற எழுத்துகளால் குறிக்கப்படும். ஒரு குவாட்ரில்லியன் பைட்டுகளைக் (1, 125, 899, 906, 842, 624) குறிக்கிறது.

PET computer : பெட் கணினி : Personal Electronic Transaction Computer என்பதன் குரும்பெயர். 1977 இல் கம்மோடர் நிறுவனம் சிபி/எம் மற்றும் ஃபிளாஸ்டிக் சார்ந்த தனிநபர் கணினியை அறிமுகப்