பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Phase locked

1107

phoenix BiOS


மீது இலக்க முறைத் தரவுவை ஏற்றும் செயலாக்க முறை. குறிப்பிட்ட கால இடவெளியில் சுமப்பியின் படிநிலைக் கோணத்தை மாற்றி, தரவு அனுப் புகையில் துண்மி (பிட்) அடர்வு அதிகரிக்கப்படுகிறது. 2. மின்காந்த சேமிப்புச் சாதனங்களில் தரவுவைப் பதியும் ஒரு வகைத் தொழில்நுட்பம். இந்த முறையில் தரவு சேமிப்பு அலகு இருபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ் வொன்று எதிரெதிர் துருவநிலை கொண்டதாக காந்தப்படுத்தப்படுகிறது.

Phase locked : நிலைபூட்டிய : ஒரு மின்னணு மின்சுற்றில் ஒரே நேரத்திய தாக்குதலைப் பராமரிக்கும் தொழில்நுட்பம். உள்ளீட்டு சமிக்கைகளிடமிருந்து மின்சுற்றுகள் அவற்றின் நேரத்தை அமைத்துக் கொள்கின்றன. மேலும், ஒரேநேரத்தில் எல்லாம் இயங்குகின்றனவா என்பதற்கான பதில்பெறும் மின்சுற்றுகளையும் அவை வழங்குகின்றன.

Phase modulation : நிலைக் குறிப்பேற்றம் : அனுப்பும் தொழில்நுட்பம் தரவு சமிக்கையை அதனைக் கொண்டு செல்லும் அமைப்புடன் சேர்க்கிறது. கேரியரின் நிலையை மாற்றியமைப்பதன் மூலம் இது செய்யப்படுகிறது.

phase-shift keying : படிநகர்வு குறியாக்கம் : தகவலைக் குறியாக்கம் செய்ய இணக்கிகளில் பயன்படுத்தப்படும் ஒரு தரவு தொடர்பு வழிமுறை. இலக்க முறைத் தரகவலை ஏந்திச் செல்ல ஒரு சுமிப்பி அலையின் படி நிலை நகர்வு, அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. இந்த நுட்பத்தின் எளிய வடிவம், சுமப்பி அலையின் படிநிலை இருநிலைகளில் ஏதேனும் ஒன்றில் இருக்கும். 0 டிகிரி நகர்வு இருக்கும் அல்லது 180 டிகிரி நகர்வு இருக்கும். அலையின் படிநிலையை நேரெதிராக மாற்ற முடியும்.

Pheripheral Slots : புறநிலைத் துளை விளிம்புகள் : சில கணினிகளின் இல்லத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள வெற்றுத் துளை விளிம்புகள். இவற்றின் மூலம், வன்பொருள்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் திறம்பாடுகளைப் பெருக்குவதற்கு, அச்சிட்ட மின்சுற்று வழி அட்டைகளைச் சேர்க்கலாம். மின்சுற்றுவழிப் பலகைகளைச் செருகுவதற்கான தாய்ப் பலகை குழிப் பள்ளங்கள்.

phoenix BIOS : ஃஃபோனிக்ஸ் பயாஸ் : ஃபோனிக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் தயாரிக்கும் ரோம் பயாஸ் (ROM