பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

physical address

1112

physical lock


physical address:பருப்பொருள் முகவரி:ஒரு பொருள் அல்லது சாதனத்தின் உண்மையான,எந்திர முகவரி.

physical coordinates:பருப்பொருள் ஒருங்கிணைப்புகள்:ஒளிக் காட்சியமைப்பின் ஒரு இடத்தின் ஒருங்கிணைப்புகள்.இதுமேல் மூலையில் அளப்பதை ஒட்டி அளக்கப்படும்.இது 0.0 என்று கூறப்படும்.

physical design:வடிவமைப்பு;பருப்பொருள்:சேமிப்புச் சாதனங்களில் தரவுகள் எவ்வாறு வைத்து வரப்படுகின்றன என்பதையும் அவை எவ்வாறு அணுகப்படுகின்றன என்பதையும் குறிக்கும் சொல்.

physical-image file:பருநிலை படிமக் கோப்பு:குறுவட்டில்(சிடி ரோம்) பதிவதற்காக வைத்துள்ள தரவுவை நிலை வட்டில் சேமித்து வைத்துள்ள கோப்பு.இவ்வாறு ஒரு கோப்பில் சேமித்து வைப்பது சில சிக்கல்களைத் தவிர்க்க உதவுகிறது.குறிப்பாக குறு வட்டில் எழுதும் நேரம் மிச்சமாகிறது. சிதறிக்கிடக்கும் கோப்புகளை தேடிப்பிடித்து தொகுத்து எழுதுவதற்காக எடுத்துக் கொள்ளப்படும் அதிக நேரம் தவிர்க்கப்படுகிறது.

physical layer:பருநிலை அடுக்கு:ஏழு அடுக்குகள் கொண்ட ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ அடுக்கின் முதல் அல்லது மிக அடியிலுள்ள அடுக்கு.முற்றிலும் வன்பொருளைச் சார்ந்தது.தரவுப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ள இரு கணினி களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தி பராமரிக்கும் பணிகளின் அனைத்துக் கூறுகளையும் கவனித்துக் கொள்கிறது.வட(cable)இணைப்பு,மின்சார சமிக்கைகள் மற்றும் எந்திர இணைப்புகள் ஆகியவை இவ்வடுக்கின் வரன்முறைகளுள் சில.

physical link:பருபொருள் இணைப்பு:இரண்டு சாதனங்களுக் கிடையிலான மின்னணு இணைப்பு.தரவு மேலாண்மையில்,ஒரு பட்டியல் அல்லது பதிவகத்தில் உள்ள காட்டி வேறொரு கோப்பில் தரவு எந்த இடத்தில் உள்ளது என்பதை அது குறிப்பிடும்.

physical lock:பருநிலைப் பூட்டு:தரவுவை பயனாளர் அணுகுவதைத் தடுத்தல்.பூட்டினைத் திறத்தல்,மூடல்,பொத்தான் அல்லது கோப்பு பாதுகாப்பு எந்திர அமைப்பு மூலம் வழங்கப்படுகிறது.நெகிழ்வட்டின்மேல் செய்வது போன்றது.