பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

physical memory

1113

physical memory


physical memory : பருநிலை நினைவகம் : ஒரு கணினி அமைப்பில் பொருத்தப்பட்டுள்ள மெய்யான நினைவகம். இது மெய்நிகர் நினைவகத்துக்கு (Virtual Memory) மாறானது. 4 எம்பி மட்டுமே பருநிலை ரேம் (RAM) நினை வகம் பொருத்தப்பட்டுள்ள ஒரு கணினியில் 200 எம்பிவரை மெய்நிகர் நினைவகம் வைத்துக் கொள்ள முடியும்.

Physical object : பருநிலை பொருட்கள்.

Physical parts : பருநிலை உறுப்புகள்.

physical record : பருப்பொருள் பதிவேடு : உட்பாட்டுக்கான அல்லது வெளிப்பாட்டுக்கான தரவு அலகு. துளை அட்டை, நாடா வட்டகை, ஒரு வட்டில் பதிவுசெய்தல் போன்றவை இவ்வகையின. ஒர் பருப்பொருள் பதிவுநூல் ஒன்று அல்லது மேற்பட்ட தருக்க முறைப் பதிவுகள் அடங்கி யிருக்கலாம்.

physical security : பருப்பொருள் பாதுகாப்பு : ஒரு கணினி மையத்தில் சாதனங்களை அணுகுவதைக் கட்டுப்படுத்துவதற்கான காப்புகள், சிறப்புக் குறி யீடுகள், பூட்டுகள், மணியொலி அமைப்புகள் ஆகியவை.

Pi (pye & π) : பை : “பை”என்ற ஒலிப்புடைய கிரேக்க எழுத்து. வட்டத்தின் விட்டத்திற்கும் சுற்று வரைக்குமுள்ள வீதத்தினைக் குறிக்கும் அடையாள எழுத்து. இதன் மதிப்பு எட்டு பதின்மத் தானங்கள்வரைக் கணக்கிடப் பட்டுள்ளது. π : 3. 14159265'

pica : பிக்கா;அச்செழுத்து அளவீடு : 1. ஒர் அங்குலத்தில் ஆறுவரிகள் அடுக்கக்கூடிய அளவுள்ள அச்சுருப் படிவம்.

picking device : பதிவுச் சாதனம்;பொறுக்குச் சாதனம் : ஒரு காட்சித் திரையில் தரவுகளைப் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒளிப்பேனா, சுட்டிப் பொறி போன்ற உட்பாட்டுச் சாதனம்.

pico : பிக்கோ : நூறாயிரங் கோடியில் ஒரு பகுதி.

pico computer : பிக்கோ கணினி : ஒரு வினாடியின் நூறாயிரங் கோடி யில் ஒரு பகுதி நேரத்தில் தரவுகளைச் செய்முறைப்படுத்தும் திறன்வாய்ந்த ஒரு கணினி.

pico Java : பிக்கோஜாவா : ஜாவா மொழி நிரல்களை நிறை வேற்றுகிற நுண்செயலி. சன் மைக்ரோசிஸ்.

pico second : பிக்கோ வினாடி : ஒரு வினாடியில் நூறாயிரங் கோடியில் ஒரு பகுதி.