பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

PICS

1114

piezoelectric


Pics : பிக்ஸ் : இணைய உள்ளடக்கத் தேர்வுக்கான பணித்தளம் எனப் பொருள்படும். Platform for internet Content Selection என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஒரு மென்பொருளைப் பயன்படுத்தி இணையப் பயனாளர் ஒருவர் இணையத்திலுள்ள தமக்குப் பிடித்த தகவலடங்கிய குறிப்பிட்ட தளங்களைத் தாமாகவே தேடி அணுகுமாறு செய்ய முடியும். அதேவேளையில் விரும்பத்தகாத தகவலடங்கிய தளங் களைப் புறக்கணிக்குமாறும் செய்யமுடியும். இவ்வாறு தளங்களைத் தேர்வு செய்ய வெவ்வேறான தரமதிப்பீட்டு முறைகள் பயன்பாட்டில் உள்ளன.

. pict : பிக்ட் : மெக்கின்டோஷ் கணினிகளில் பயன்படுத்தப்படும் பிக்ட் (PICT) வடிவாக்க முறையில் பதிவு செய்யப்படும் வரைகலைப் படிமக்கோப்பு களை அடையாள்ங்காட்டும் கோப்பு வகைப்பெயர்.

PICT : பிக்ட் : பொருள்நோக்கு முறையிலோ பிட்-மேப் முறையிலோ வரைகலைப் படிமங்களைச் சேமிப்பதற்கான ஒரு கோப்பு வடிவாக்க வரையறை. ஆப்பிள் மெக்கின்டோஷ் பயன்பாடுகளில் முதன்முதலாக பிக்ட் கோப்பு வடிவாக்க முறை பயன்படுத்தப்பட்டது. எனினும், பல ஐபிஎம் ஒத்தியல்புப் பயன்பாடுகளும் பிக்ட் கோப்புகளை படிக்க முடியும்.

picture : படம்.

picture box : படப் பெட்டி.

picture element : படத் துகள்;படப் புள்ளி.

picture graph : படவரைவு : பட்டைகளுக்குப் பதிலாகக் குறியீடுகளைப் பயன்படுத்தும் பட்டை வரைபடம்.

picture in picture : படத்துள் படம்.

picture processing : பட அலசல்.

picture tube : படக்குழல் : மின் கதிர்க் கொடியைத் திருப்பி ஒளியியக்கத் திரைமீது விழச்செய்ய உதவும் அமைப்பு. இது தொலைக்காட்சிப் படக்குழ லாகப் பயன்படுத்தப்படுகிறது.

pie chart : வட்ட வரைபடம் : தகவல்களைக் குறித்துக் காட்ட உதவும் வரைபடம். இதில் தகவல்கள் ஒரு வகை வட்ட வடிவில் வரிசைப் படுத்தப்படு கின்றன. இதனால் தகவலின் ஒவ்வொரு இனத்தையும் ஒருங் கிணைந்த தகவலாகக் கண்ணால் பார்க்கலாம்.

piezoelectric : மின் அமுக்கம் : மின்னழுத்தத்திற்கு உட்படும்