பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

piggyback board

1115

pinch roller


போது எந்திரவியல் அழுத்தத்திற்கு உள்ளாகிற அல்லது எந்திரவியல் அழுத்தத்திற்கு உட்படும்போது மின்னழுத்தத்தை உண்டுபண்ணுகிற சில படிகங்களின் பண்பியல்பு.

piggyback board:குட்டி துணைப் பலகை;மின்சுற்று வழிப் பலகை:ஒரு பெரிய மின்சுற்று வழிப் பலகைக்குக் கூடுதல் ஆற்றல் சேர்ப்பதற்காக அந்தப் பெரிய மின்சுற்றுவழிப் பலகையில் பொருத்தப்படும் ஒரு சிறிய அச்சிட்ட மின்சுற்று வழி.

piggyback file:துணைக் கோப்பு;குட்டிப் பைக் கோப்பு:ஒரு கோப்பு முழுவதையும் படியெடுக்காமல் கோப்பின் முடிவில் கூடுதல் பதிவுகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய கோப்பு.

PILOT:பைலட்(ஒரு கணினி மொழி):வாசகம் அடிப்படையிலான கணினி மொழி.முதலில்,கணினி உதவியுடனான அறிவுறுத்தத்திற்கான ஒர் எழுத்தாளர் மொழியாக வடிவமைக்கப்பட்டது.தொடக்க மாணவர்களுக்கு கணினிச் செயல்முறைப் படுத்துதலைக் கற்பிக்கவும் பயன்படுகிறது.இதில், ஆற்றல் வாய்ந்த,சொற்றொடரியல் உரையாடல் செய்முறைப்படுத்தும் கட்டளைகள் அடங்கியுள்ளன்.

pilot method:வெள்ளோட்ட முறை:விரிவான நடவடிக்கைப் பரப்பில் அல்லாமல்,ஒரே பகுதியில் புதிய கணினி யமைவினைக் கையாள முயலும் நடவடிக்கை.எடுத்துக்காட்டு:ஒர் அமைவனத்தில் புதியதொரு தரவு பொறி யமைவினைப் புகுத்தி,அது வெற்றிகரமாக இயங்குகிறது என்பதைக் கண்டறியும்வரை அதனை அந்த அமைவனத்தின் ஒரு பகுதி மட்டுமே பயன் படுத்துமாறு செய்தல்.

pin:பின்:"சொந்த அடையாள எண்"என்று பொருள்படும்“Personal Identification Number"என்ற ஆங்கிலச் சொல்லின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

பிஞ்ச் ரோலர்

pinch roller:பிஞ்ச் ரோலர்:ஒரு நாடா இயக்கியில் உள்ள சிறிய