பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pin grid array

1117

pipeline


வகம். இரட்டை இடையகம் எனலாம். இதிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் மாற்றி மாற்றி உள்ளிட்டால் நிரப்பப் படுவதும் வெளியீட்டுக்கு வழித் தெடுப்பதும் நடைபெறும். இதன் காரணமாய் ஏறத்தாழ தொடர்ச்சியான உள்ளிட்டு/வெளியீட்டுத் தரவுகளின் தாரை பாய்ந்து கொண்டிருக்கும்.

pin grid array : பின் கட்டக்கோவை : பலகையில் சிப்புகளைப் பொருத்தும் வழிமுறை. குறிப்பாக ஏராளமான பின்களைக் கொண்ட சிப்பு களுக்குப் பொருத்தமான முறை. பின்கட்டக் கோவை சிப்புகளில், பின்கள் சிப்புவின் அடிப்பாகத்திலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும். ஆனால் இரட்டை உள்ளிணைப்புத் தொகுப்புள்ள சிப்புகளிலும், ஈயமில்லா சிப்புச் சுமப்பித் தொகுப்புகளிலும் பின்கள் சிப்புவின் பக்கவாட்டு ஒரங்களில் நீட்டிக் கொண்டிருக்கும்.

pinouts : ஊசி வெளியீடுகள் : பல் கம்பி இணைப்பியில் உள்ள ஒவ்வொரு இணைப்பியையும் பற்றிய விளக்கமும், நோக்கமும்.

pins : இணைப்பிகள் : ஒர் இரட்டை உட்பாட்டுத் தொகுதியில், ஒரு அச்சடிப்பி மின்சுற்று வழிப் பலகையிலுள்ள குதை குழிகளில் செருகக் கூடிய சிறிய உலோக இணைப்பிகள்.

இணைப்பிகள்

pipe : குழாய் : ஒரு நிரல் தொடரின் வெளியீட்டை வேறொன்றின் உள்ளீடாக ஏற்றுக்கொள்ள பங்கிடும் இடம். டாஸ் மற்றும் ஒஎஸ்/2இல் குழாய் நிரல் என்பது செங்குத்தான வரி "சுர்" என்ற சொல்லாணை பட்டியலின் வெளியீட்டை வகைப்படுத்தும் பயன்பாட்டுக்கு அனுப்புகிறது.

pipeline : குழாய் இணைப்பு;தேக்க நீக்கம்;குழாய் தொடர் : ஒன்றன்மேல் ஒன்று அழுந்திச்