பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

auto bypass

111

ΑUΤΟΕΧΕ. ΒΑΤ


பழுதானால், அதை விடுத்து மாற்று வழியில் போகும் திறன். இதனால் மற்ற சாதனங்கள் தொடர்ந்து இயங்க முடியும்.

auto cad : ஆட்டோ காட் -ஒரு மென்பொருள் தொகுப்பு.

auto chart : உடனடி நிரல் படம் : தானியங்கு வரைபடம்.

auto code : தானியங்கு குறிமுறை

auto correct : தானாகப் பிழை திருத்தல்; தானியங்கு பிழை திருத்தம் : விண்டோசில் இயங்கும் மைக்ரோ சாஃப்ட்வேர்டு பணித் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒரு செயல்கூறு. ஓர் ஆவணத்தில் தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போது, சொல்லில் இருக்கும் எழுத்துப் பிழைகள் தாமாகவே சரி செய்யப்பட்டு விடும். அதுமட்டுமின்றி, தட்டச்சு செய்யப்படும் சில குறியீடுகள்/சொற்கள், முன் கூட்டியே வரையறுக்கப்பட்ட படி பதிலீடு செய்யப்பட்டு விடும். எடுத்துக்காட்டாக, the என்ற சொல்லைத் தவறுதலாக teh என்று தட்டச்சு செய்தோமெனில் அது தானாகவே the என்று மாறிவிடும். விசைப் பலகையிலுள்ள மேற்கோள் குறிகள் ஒரேபுறம் திரும்பிய நிமிர்ந்த குறிகள் (") ஆகும். இதுபோன்ற ஒற்றை மற்றும் இரட்டை மேற்கோள் குறிகள் ஆவணத்தில் இருபுறம் அடைக்கும் வரைந்த குறிகளாய் ("மற்றும்") மாறிவிடும். பயனாளர் இது போன்ற தானியங்கு பிழை திருத்த/பதிலீட்டு வசதிகளை செயலுமைப்படுத்த வேண்டும்.

auto dial : தானியங்கு எண் சுழற்றி : தானியங்கு அழைப்பி : தொலைபேசி இணைப்புடன் பொருந்தக் கூடிய மோடெம். ஒரு தொலைபேசி எண்ணைச் சுழற்றி மோடெமும் தகவல் தொடர்பு மென்பொருளும் முறையான தகவல் தொடர்பு நடைமுறைகளை நிறைவேற்றக் கூடியவை. அதனால் கணினிகளுக்கிடையே தரவுகளைப் பரிமாறிக் கொள்ள முடியும்.

AUTODIN : ஆட்டோடின் : தானியங்கு இலக்க முறை பிணையம் எனப் பொருள்படும் AUTOmatic Digital Network : என்பதன் குறும் பெயர். ராணுவ தகவல் தொடர்பு முறையில் தரவுகளைக் கையாளும் பகுதி.

ΑUΤΟΕΧΕ. ΒΑΤ : ஆட்டோ இஎக்ஸ் இ. பேட் : தானியங்கு நிரல் : எம்எஸ் டாஸ் இயக்க முறைமையில் பயன்படுத்தப்படும் கோப்பு. நிரல்களடங்கிய கணினி இயக்கப்படும்போது