பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

planimeter

1121

platform



planimeter : சமதளமானி : ஒரு சமதள உருவம், ஒரு எழுத்தாணியால் வரையப்படும் போது, அந்த உருவத்தின் மேற்பரப்பினை அளவிடுவதற்கான புறநிலைச் சாதனம்.

planit : பிளானிட் : "பரிமாற்றுப் போதனையைச் செயல்முறைப் படுத்தும் மொழி"என்று பொருள்படும்"Programming Language for Interactive Teaching"என்ற ஆங்கிலச் சொல்லின் குறும்பெயர். கணினி வழி அறிவுறுத்தப் பொறியமைவுகளுடன் பயன் படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு மொழி.

plansheet : சம தளத் தகடு;விரி தாள் : அகல் தகட்டுப் பணிப்பாளம் போன்றது.

plasma display panel : படிகக் காட்சி முனையம்;மின்மக் காட்சித் திரை : பொறியமைவு செய்த நியோன் ஆர்கான் வாயுவைப் பயன் படுத்துகிற காட்சி முனைய வகை. காட்சிப் பரப்பில் அடங்கியுள்ள ஓர் அச்சு வார்ப்புருவில் புள்ளிகளைத் திருப்புவதன் மூலம் உருக்காட்சி உருவாக் கப்படுகிறது. உயர் ஆற்றல் உருக்காட்சி உறுதிப்பாடுடையது. நீண்ட நேரம் ஒளிரக்கூடியது;சுடர் நடுக்கம் இல்லாதது.

platen : தாள் அழுத்துத் தகடு, அழுத்துத் தட்டு;அழுந்துந் தகடு, அச்சு உருளை : அச்சகத்தில் அச்சுத்தாள் அழுத்தும் தகட்டுப் பாளம்.

அழுத்துத் தட்டு

தாள் அழுத்துத் தட்டு

தாள் அழுத்துத் தட்டு

platform : மேடை : ஒரு குறிப்பிட்ட மாதிரி அல்லது கணினி குடும்பத்திற்கான வன்பொருள் கட்டுமான அமைப்பு. மென்பொருள் உருவாக்குபவர்கள். தங்கள் நிரல் தொடர்களை எழுதுவதற்கு இது ஒரு தர

அமைவாகும். இயக்க அமைப்பையும் இச்சொல் குறிப்பிடுகிறது.