பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

PL/I

1123

plotter


பாடான வகை. செலவு குறைவானது. இரண்டு சுமப்பிகளும் தோற்றத்தில் ஒன்றுபோல இருப்பினும் பீஎல்சிசி-க்கள் பருநிலையில் ஈயமற்ற சிப்புச் சுமப்பியுடன் ஒத்தியல்பற்றவை. ஏனெனில் அவை பீங்கான் (ceramic) பொருளால் ஆனவை.

PL/I : பிஎல்/I : "செயல்முறைப் படுத்தும் மொழி - I" (Programming Language-I) என்பதன் குறும்பெயர். இது பொது நோக்கத்திற்கான உயர்நிலை செயல்முறைப் படுத்தும் மொழி. இது அறிவியல் மற்றும் வணிகப் பயன் பாடுகளுக்காக வடிவமைக்கப் பட்டது. கோபால் (Cabol), ஃபோர்ட்ரான் (Fortran), ஆல்கால் (Algol) ஆகிய மொழிகளின் அம்சங்களை ஒருங் கிணைத்துள்ளது.

PL/M : பிஎல்/எம் : நுண் கணினிகளை செயல்முறைப்படுத்து வதற்குப் பயன்படுத்தப்படும் செயல்முறைப்படுத்தும் மொழி. இதனை"இன்டெல் கார்ப்பொ ரேஷன்" (Intel Corporation) என்ற நிறுவனம் வடிவமைத்தது. இது துண்கணினிகளை மிக விரைவாக இயக்குவதற்கு நிரலிடுவதற்குரிய உயர்நிலை மொழி. இது PL/I என்ற பொதுநோக்குச் செயல்முறைப்படுத்தும் மொழியிலிருந்து வடிவமைக்கப் பட்டதாகும்.

PL/M plus : பீஎல்/எம் பிளஸ் : "பீ. எல்/எம்"என்ற செயல் முறைப்படுத்தும் மொழியின் விரிவாக்கிய வடிவம். இதனை"நேஷனல் செமி கண்டக்டர்ஸ்" (National Semi Conductors) ஏன்ற நிறுவனம் தனது நுண் செய்முறைப்படுத் திகளுக்காக வடிவமைத்தது.

plot : வரைவு : ஒரு வரைவி மூலம் வரைபடம் அல்லது உருவப்படம் வரைதல்.

plotter : வரைவி;வரைவான் : தானியக்கக் கட்டுப்பாட்டுப் பேனாக்கள் மூலம் காகிதத்தில் படங்களையும் வரைகலைக் காட்சிகளையும் வரைகிற ஒரு வெளிப்பாட்டுச் சாதனம். வரை கலைகளிலும், கணினி உதவியால் உருவாக்கப்படும் வடிவமைப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது. பொறியியல் துறையிலும், துணி நெசவுத் துறையிலும் பணிபுரியும் வடி வமைப்பாளர் களுக்கு இது பெரிதும் உதவுகிறது. இதில், காகிதம் ஒரு தட்டையான படுகைமீது ஏற்றப்பட்டிக்கும். இதன்மீது வரைவதற்குரிய பேனா, XYஅச்சுகளில்

வரை படங்களை வரைகிறது. இதில் பல்வேறு வண்ணங்களில் வரைபடங்களைப் பெறுவதற்கு