பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

plotter, data

1124

plug compatible


பல்வேறு வண்ணப் பேனாக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

plotter, data : தரவு வரைவி : தரவு வரைவுபொறி.

plotter in a cartridge : பெட்டியில் நினைவகத் தட்டுப் பகுதி : சான்டியாகோவின் பசிஃபிக் டேட்டா புராடக்ட்ஸ் நிறுவனத்தின் லேசர் அச்சுப்பொறிகளுக்காக ஒரு பெட்டியில் அமையும் எச்பிஜிஎல் போலச் செய்தது.

plotter resolution : வரைவு தெளிவுத் திறன்.

plotter software : வரைவி கணினிச் செயல்முறை : வரைவி மென்பொருள்.

piotter, x-y : x-y வரைவி.

plotting a curve : வளைகோடு வரைதல் : ஆயத்தொலைவு களிலிருந்து புள்ளிகளை இடங்குறித்து, அந்தப் புள்ளிகளை இணைத்து வளைகோடாக வரைதல். இது, மாறிலிகளுக் கிடையிலான தொடர்பினைச் சித்தரிக்கும் உள்ளபடியான வளைகோட்டினை ஏறக்குறைய ஒத்திருக்கும்.

plug : இணைப்பி;செருகி : ஒரு கம்பி படத்திலுள்ள இணைப்பு. இது பொறியமைப்பின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும்.

plug and play : இணைத்து- இயக்கு;பொருத்தி-இயக்கு : இன்டெல் நிறுவனம் உருவாக்கிய வரன்முறைத் தொகுதி. ஒரு பீசியை இயக் கும்போது, திரையகம், இணக்கி மற்றும் அச்சுப்பொறி போன்ற புறச் சாதனங்களை தானாகவே அடையாளங்கண்டு தகவமைவுகளை அமைத்துக் கொள்ளும். பயனாளர் ஒருவர் புறச்சாதனம் ஒன்றை கணினியுடன் இணைத்து இயக்கிக் கொள்ளலாம். தனியாகத் தகவமைவுகளைக் குறிக்க வேண்டியதில்லை. இணைத்து இயக்கு வசதி வேண்டிய பீ. சி-க்களில், இணைத்து இயக்கு வசதியுள்ள பயாஸ், இணைத்து இயக்குவதற்கான விரிவாக்க அட்டையும் இருக்க வேண்டும்.

plugboard : இணைப்பிப் பலகை;செருகுப்பலகை : அலகுப் பதிவுச் சாதனங்களின் செயற்பாட்டினைக் கட்டுப்படுத்தும் துளையிட்ட பலகை. இதனைக் கட்டுப்பாட்டுப் பலகை (Control Panel) என்றும் கூறுவர்.

plug compatible : மாற்று இணைப்பி;செருகுப் பொருத்தம் : இடைமுகப்பு மாற்றமைவு தேவைப்படாத புறநிலைச் சாதனம். இதனை மற்றொரு உற்பத்தியாளரின் பொறி