பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

plug-in

1125

PNP transistor


யமைவுடன் நேரடியாக இணைக்கலாம்.

plug-in : கூடுதல் வசதி : 1. ஒரு பெரிய பயன்பாட்டுத் தொகுப்பில் கூடுதல் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு சிறிய மென்பொருள் நிரல். 2. தொடக்க காலங்களில் நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர் இணைய உலாவிக்காக இத்தகைய கூடுதல் வசதி மென்பொருள்கள் வெளியிடப்பட்டன. பொதுவாக இணைய உலாவி (Internet Browser) ஹெச்டீஎமெல் ஆவணத்திற்குள் உட்பொதித்த, அசைவூட்டம், ஒளிக்காட்சி, கேட்பொலி தொடர்பான கோப் புகளை அடையாளம் காணாது. கூடுதல் வசதி மென்பொருளை நிறுவிக் கொண்டால் இது இயல்வதாகும். இப்போதெல்லாம் அனைத்து நிறுவனங் களுமே தத்தமது மென்பொருள் தொகுப்புகளுக்குக் கூடுதல் வசதி மென்பொருள்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன.

plugs and sockets : செருகிகளும் துளைகளும் : எல்லா வகையான மின்னணுச் சாதனங்களையும் ஒன்றாக இணைக்கும் பருப்பொருள் இணைப்புகள்.

. pm : . பீ. எம் : ஒர் இணைய தள முகவரி செயின்ட் பியாரே மிக்குலான் நாட்டைச் சேர்ந்ததுஎன்பதைக் குறிக்கும் பெரும்புவிப் பிரிவுக் களப்பெயர்.

PMOS : பீஎம்ஓஎஸ் : "P-அலை வரிசை உலோக ஆக்சைடு மின்கடத்தாப் பொருள்கள் (P-channel metallic oxide semi conductors) என்பதன் குறும் பெயர். இது உலோக ஆக்சைடு அரைக்கடத்தி பொருள் மின்சுற்று வழிகளில் மிகப் பழமையானது. இதில் பாயும் மின்னோட்டத்தில் நேர்மின்னழுத்தம் பாய்கிறது. இது, N-அலை வரிசை உலோக ஆக்சைடு அரைக்கடத்தி பொருள் களிலிருந்து (N-channel MOS) வேறுபட்டது.

. pn : பிஎன் : ஒர் இணைய தள முகவரி பிட்கைர்ன் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

PN : பீஎன் : "போலந்துக் குறிமானம்" என்று பொருள்படும்."polish notation"என்னும் ஆங்கிலச் சொல்லின் குறும்பெயர்.

PNP transistor : பீஎன்பீ மின்மப் பெருக்கி : இருதுருவ (bipolar) மின்மப் பெருக்கிகளுள் ஒரு வகை. இதன் அடிவாய் (base) என் (N) -வகைப் பொருளால் ஆனது. பீ. வகைப் பொருளால் ஆன உமிழி (emitter) மற்றும்