பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

poaching

1126

point, assumed decimal


திரட்டி (collector) இவற்றுக்கு இடையே செயல்படும். ஒரு மின்மப் பெருக் கியின் மூன்று முனையங்களான அடிவாய், உமிழி, திரட்டி ஆகிய மூன்றுக்குமிடையே மின்னோட்டம் பாயும். ஒரு பீஎன்பீ மின்மப் பெருக்கியில் துளைகளே (மின்னணு இடம் பெயர்ந்த வெற்றிடம்) பெருமளவு மின்சுமப் பிகளாகச் செயல்படுகின்றன. அவை உமிழியிலிருந்து திரட்டியை நோக்கி நகர்கின்றன.

poaching : கரவு அணுகுதல்;ஊடுருவல் : ஒரு பயனாளர் தனக்கு உரிமையுடையதாக இல்லாத தகவல்களைத் தேடிக் கோப்புகளை அல்லது செயல்முறைப் பட்டியல்களை அணுகுதல்.

pocket computer : பையளவுக் கணினி : கையில் கொண்டு செல்லக்கூடிய கையடக்கக் கணினி. விண்டோஸ் சிஇ என்னும் இயக்க முறைமையில் செயல்படும் இக்கணினியில், மேசைமேல் கணினியில் செயல்படும் அனைத்துப் பயன்பாட்டுத் தொகுப்புகளையும் இயக்க முடியும்.

point : புள்ளி;சுட்டு : வரை கலைத் தகவலில் மிகச்சிறிய அலகு. இது ஆயத்தொலைவு முறையில் தனியொரு அமைப்பிடத்தைக் குறிக்கிறது.

point-and-click : சுட்டு-பின்-சொடுக்கு : பயனாளர் ஒரு குறிப்பிட்ட தரவினைத் தேர்வு செய்து உரிய நிரலினை இயக்குவதற்கான ஒரு சுட்டி அல்லது பிற சுட்டுக் கருவிகள் மூலம் இதனை எளிதாகச் செய்ய முடியும். சுட்டியில் பொத் தானைச் சொடுக்கியும், பிற சுட்டுக் கருவிகளில் அதற்குரிய பகுதியில் அழுத்தியும் இதனைச் சாதிக்கலாம்.

point and shoot : சுட்டுவும் பாய்வும் : சுட்டியை (கர்சர்) ஒரு வரியிலோ அல்லது ஒரு பொருளின் மீதோ நகர்த்துவதன் மூலம் ஒரு பட்டியல் தேர்வை தேர்ந்தெடுப்பது அல்லது ஒரு பயன்பாட்டை இயக்குவது திரும்பச் செல்லும் விசை அல்லது எலிவடிவச் சுட்டிப் பொத்தானை நகர்த்தியும் இவ்வாறு செய்யலாம்.

point arithmatic, fixed : நிலைப்புள்ளிக் கணக்கீடு.

point arithmatic, floating : மிதவைப் புள்ளிக் கணக்கீடு.

point, assumed decimal : எடுகோள் பதின்மப் புள்ளி.