பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

port2

1133

Portable Document Format


port2 : கையாண்மை;ஏற்றுமதி : 1. வேறுவகைக் கணினியில் இயங்கம் வகையில் ஒரு நிரலை மாற்றியமைத்தல். 2. ஆவணங்கள், வரை கலைப் படங்கள் மற்றும் பிற கோப்புகளை ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு மாற்றுதல்.

portability : பெயர்வு ஆற்றல்;நகர்வுத் திறன் : ஒரு செயல் முறையினை ஒரு கணினி சூழலிலிருந்து மற்றொரு சூழலுக்கு எளிதாக மாற்றுவதற்குரிய வசதி.

portable : கையாளத்தகு;கையாண்மைத் திறன் : 1. ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளிலோ, ஒன்றுக்கு மேற்பட்ட இயக்க முறைமைகளிலோ செயல் படும் திறன். மிகுந்த கையாண்மைத் திறனுள்ள மென்பொருள்களை மிக எளிதாக பிற கணினிகளில் இயக்கலாம். நடுத்தர கையாண்மைத் திறனுள்ள மென்பொருள்களை கணிசமான முயற்சிக்குப்பின் பிற கணினிகளில் இயக்கமுடியும். கையாண்மைத் திறனற்ற மென்பொருள்களைப் பிற கணினி களில் இயக்க வேண்டுமெனில் ஏறத்தாழ புது மென்பொருளை உருவாக் குவதற்கு எடுக்க வேண்டிய அளவுக்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

portable computer : கையாண்மைக் கணினி;கையில் எளிதாக எடுத்துச் செல்லுமாறு வடிவமைக்கப்பட்ட கணினி. உருவ அளவு சிறிதாகவும் எடை குறைவானதாகவும் இருக்கும். கையேட்டுக் கணினி, மடிக் கணினி, உள்ளங்கைக் கணினிகளை இவ்வகையில் அடக்கலாம்.

portable distributed objects : கையாளத்தகு பகிர்ந்தமைப் பொருள்கள் : நெக்ஸ்ட் (NeXT) நிறுவனம் உருவாக்கிய மென்பொருள். யூனிக்ஸில் செயல் படும். ஒருவகைப் பொருள் மாதிரியத்தை (object model) வழங்குகிறது. ஒரு பிணையத்தில் பல்வேறு கணினிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மென் பொருள் கூறுகளை அவை ஒரே கணினியில் இருப்பது போன்று எளிதாக அணுக முடியும்.

Portable Document Format : கையாண்மை ஆவண வடிவாக்கம் : அடோப் நிறுவனத்தின் வரன்முறை. மின்னணு ஆவணங்களைப் பற்றியது. அடோப் அக்ரோபேட் குடும்ப வழங்கன்களிலும், படிப்பிகளிலும் பயன்படுத்தப்படும்