பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

port expander

1135

portrait


மேலாளருக்குத் (configuration manager) தெரிவிக்கும்.

port expander : துறை விரிவாக்கி : ஒரே துறையில் பல சாதனங்களை இணைக்கப் பயன்படும் ஒரு வன்பொருள் நுட்பம். இம்முறையில் ஒரு துறையில் பல சாதனங்கள் பொருத்தப்பட்டாலும் ஒரு நேரத்தில் ஒரு சாதனம் மட்டுமே துறையைப் பயன் படுத்திக் கொள்ளும்.

portfolio management package : மேலாண்மை ஆவண வைப்பகத் தொகுப்பு : முதலீட்டு இருப்புகளின் மாறும் மதிப்பைத் தேடி ஆராயும் நிரல் தொடர். ஆவண வைப்பகத்தின் நடப்பு நிலைபற்றிய அறிக்கைகளை உருவாக்குவதன் மூலமும், (2) வாங்கும், விற்கும் விலைகள், முதலீட்டு வரு மானம், செலவுகள், இலாபங்கள், இழப்புகள் ஆகியவற்றைக் காட்டும் துல்லியமான வரி பதிவேடுகளை வைத்திருப்பதன் மூலமும் இதனைச் செய்கிறது.

port number : துறை எண் : இணையத்தில் இணைக்கப்பட்ட கணினியில் ஒரு குறிப்பிட்ட செயலாக்கத்துக்கென ஐபீ பொதிகளை அனுப்பிவைக்கப் பயன்படும் எண். சில துறை எண்கள் நன்கறிந்த துறை எண்கள் என்றழைக் கப்படுகின்றன. உலகளவில் ஒரு குறிப்பிட்ட சேவைக்கென நிரந்தரமாய் ஒதுக்கப்பட்டவை. எடுத்துக்காட்டாக, எஸ்எம்டீபீ யின்கீழ் மின்னஞ்சல் தரவுகள் எப்போதுமே துறையெண் 25-க்கு அனுப்பப் படுகின்றன. எஃடீபீ-க்கு துறை எண் 21. ஹெச்டீடீபீ-க்கு துறை எண்-80. டெல் நெட் போன்ற சேவைகளுக்கு அவை தொடங்கும்போது தற்காலிக நிலையில்லா துறை எண்கள் ஒதுக்கப் படுகின்றன. அந்தக் குறிப்பிட்ட தகவல் பரிமாற்றத்தில், அந்த எண்ணுக்கு தகவல் அனுப்பப்படும். முடிந்தவுடன் அந்த எண்ணின் பயனும் முடிந்து விடும். டீசிபீ மற்றும் யுடிபீ நெறிமுறைகளில் மொத்தம் 65, 535 துறை எண்களைப் பயன் படுத்தமுடியும். 1 முதல் 1024 வரை சிறப்புத் துறை எண்கள். நிரலர்கள் தம் சொந்த நிரல்களில் 1024க்கு மேற்பட்ட எண்களையே பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

portrait : உருவப்படம், செங்குத்து வடிவம் : வன்படி உருவங்களைச் சார்ந்தது பற்றிய குறிப்பு புத்தகத்தில் இருப்பது போல ஒரு பக்கத்தின் குறும் பகுதியில் அந்த பணி அச்சிடப்படுகிறது என்பதை உருவப்