பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

portrait format

1136

posit



படம் குறிப்பிடுகிறது. portrait என்ற சொல் ஒவிய உலகத்திலிருந்து எடுக்கப்பட்டது. அதில் உருவப்படங்கள் செங்குத்தாகவே அமைக்கப்படு கின்றன.

portrait formatநீள்மை வடிவம், செங்குத்து உருவமைவு.

portrait mode : உருவப் படமுறை : செயல்படுத்தப்பட்ட தீர்வு அல்லது அமைப்பின் விளைவுகளை செயல்படுத்தப் பட்டபின் கண்காணித்து மதிப் பீடு செய்தல்.

portrait monitor : நீள்மைத் திரையகம் : அகலத்தைவிட உயரம் அதிகமிருக்கும் கணினித் திரையகம். 8 1/2-11 அங்குலத் தாளின் அளவுக்கு ஒத்த விகிதத்தில் இருக்கும் (அதே அளவு இருக்கும் என்பதில்லை).

நீளமைத் திரையகம்

நீளமைத் திரையகம்

ports : துறைகள்.

port settings : துறை அமைப்புகள்.

POS : போஸ் : விற்பனை முனையம் எனப் பொருள்படும் Point Of Sale என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு கடையில் பொருள் களுக்கான விலையைச் செலுத்தும் இடம். பெரும்பாலும் இந்த முனையங்களில் விற்பனைக்கான விலைச்சீட்டுத் தயாரிப்புப் பணிகள் முழுக்கவும் கணினி மயமாக்கப்பட்டிருக்கும். பொருளின்மீது ஒட்டப் பட்டுள்ள விலைச்சீட்டு அல்லது பட்டைக்கோடு, வருடி மூலம் படிக்கப்பட்டு விலைச் சிட்டை தயாரிக்கப்படும். மின்னணு பணப்பதிவேடுகள் இருக்கும். விற்பனை தொடர்பான அனைத்துத் தரவுகளும் சிறப்புச் சாதனங்கள் மூலம் பதியப்படும். இதுபோன்ற முனையங்கள் மிகப்பெரிய தானியங்கு பல்பொருள் அங்காடிகளில் செயல்படுகின்றன.

POSIT : போஸிட் : திறந்தநிலை முறைமை இணையச் செயல்பாட்டுத் தொழில் நுட்பத்துக்கான தனிக் குறிப்புகள் எனப்