பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

automated office

113

automatic data processing


கருவியினால் வரையப்படும் நிரல் படம்.

automated office : தானியங்கு அலுவலகம் : அலுவலகச் சூழலில் கணினிகள் அலுவலக மின்னணுக் கருவிகள் மற்றும் தொலைத் தகவல் தொடர்புத் தொழில் நுணுக்கம் ஆகியவை இணைவதன் விளைவு. மின்னணுவியல் அலுவலகம் என்பதைப் பார்க்கவும்.

automatic : தானியங்கி : சில குறிப்பிட்ட சூழல்களில் இயக்குவோரின் இடையீடு இல்லாமல் இயங்குகிற நடைமுறை அல்லது கருவி தொடர்பானது.

automatic abstract : தானியங்கிச் சுருக்கம் : ஒரு ஆவணத்தில் இருந்து முக்கிய சொற்களை நிரலே சுருக்கித் தருவது.

automatic backup : தானியங்கு காப்பு நகல்.

automatic carriage : தானியங்கு நகர்த்தி : தட்டச்சுப் பொறி அல்லது அச்சிடு கருவி ஒன்றுக்கான கட்டுப்பாட்டுப் பொறியமைவு. அது தானே காகிதம் நகர்த்தல், சொற்களுக்கு இடைவெளி தருதல், வரித்தாள் காகிதத்தை வெளியேற்றுதல் ஆகியவற்றைக் கட்டுப் படுத்துகிறது.

automatic carriage return : தானியங்கு நகர்த்தி திரும்பல் :

automatic check : தானியங்குச் சரிபார்ப்பு : ஓர் ஆவணத்திலுள்ள சொற்பிழை, இலக்கண பிழைகளை, நிரல், தாமாகவே சரி பார்த்தல்.

automatic coding : தானியங்கி குறிமுறையாக்கம் : மொழிமாற்றி போன்ற ஒரு நிரலைப் பயன்படுத்தி சங்கேதக் குறியீட்டிலிருந்து எந்திரக் குறியீட்டை உருவாக்குதல்.

automatic computer : தானி யங்கு கணினி : ஒரு குறிப்பிட்ட வேலையை செயல்படுத்தும் கணினி. நிரல் தொகுப்பை மாற்றுதல் தவிர வேறு மனிதக் குறுக்கீடு இல்லாமல் செயல்படுத்த வல்லது.

automatic controller : தானியங்கு கட்டுப்படுத்தி : உணர் சாதனம் மூலம் வரும் சமிக்கைளை ஏற்றுக் கொண்டு, ஒழுங்குபடுத்தி, தரவுகளை ஒப்பிட்டு தேவையான திருத்தங்களைச் செய்யும் திறனுள்ள ஒரு கருவி அல்லது சாதனம்.

automatic data processing : தானியங்குத் தரவுச் செயலாக்கம் : தரவுகளின் மீது எந்திரங்களைப் பயன்படுத்தி, செயலாக்கி விடைபெறுவது.


8