பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

power, memory

1142

powerPC platform


power, memory : நினைவகத் திறன்.

power off : மின்னிணைப்புத் துண்டிப்பு.

power on : மின்விசைத் தொடுப்பு : மின்விசையைத்'தொடுப்பு'நிலையில் வைத்து மின்னோட்டம் நடைபெறுவது அல்லது ஒரு சாதனத்திற்கு மின்னோட்டம் செல்லுமாறு செய்தல். இதனை விசையேற்றம் (Power up) என்றும் கூறுவர்.

power-on key : மின் இயக்கு விசை;மின் நிகழ்த்து விசை : ஆப்பிள் ஏடீபி மற்றும் நீட்டித்த விசைப் பலகைகளில் மெக்கின்டோஷ் II கணினிகளை இயக்குவதற்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசை. இடப்புறம் நோக்கிய முக்கோணக் குறி இடப்பட்டிருக்கும். மின்சார நிகழ்/அகல் (on/off) நிலை மாற்றிக்குப் (switch) பதிலாகப் பயன்படுகிறது. மின்சாரத்தை நிறுத்துவதற்கென தனியான விசை கிடையாது. கணினியில் சிறப்புப் பட்டியிலிருந்து (menu) கட்டளையைத் தேர்வு செய்தால் கணினியின் இயக்கம் நின்றுபோகும்.

Power-On Self Test : மின்-நிகழ் சுயசோதனை : கணினியின் அழியா நினைவகத்தில் (ROM) சேமித்து வைக்கப்பட்டுள்ள நிரல் கூறுகளின் தொகுப்பு. நிலையா நினைவகம் (RAM), வட்டு இயக்ககங்கள், விசைப்பலகை போன் றவை சரியாக இணைக்கப்பட்டு செயல்படும் நிலையில் உள்ளனவா என்பதைப் பரிசோதிக்கும் நிரல்கள் இதில் உள்ளடங்கியுள்ளன. ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் இந்த நிரல்கூறுகள், பீப் ஒலி எழுப்பியோ, பிழை சுட்டும் செய்தி மூலமாகவோ பயனாளருக்குச் சுட்டிக்காட்டுகின்றன. இச் செய்திகள் பெரும்பாலும் வழக்கமான கணினித் திரையில் காட்டப்படும். மின்-நிகழ் சுயபரிசோதனை வெற்றிகரமாக முடிந்தபின், கட்டுப்பாடு, கணினியின் இயக்கத் தொடக்க நிரலேற்றிக்கு மாற்றப்படும்.

power PC : பவர் பிசி : பிஎம்/ஆப்பிளின் கூட்டு முயற்சிக்காக மோட்டோரோலா நிறுவனம் உருவாக்கும் 'ரிஸ்க்' (risc) சிப்பு.

power PC platform : பவர் பீசி பணித் தளம் : 601 மற்றும் அதன்பின் வந்த சில்லுகளின் அடிப்படையில் ஐபிஎம், ஆப்பிள், மோட்டோரோலா நிறுவனங்கள் உருவாக்கிய பணித்தளம். ஒன்றுக்கு மேற்பட்ட இயக்க முறைமைகளைப்