பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Powerpc Reference

1143

Power up


பயன்படுத்த இப்பணித்தளம் வழிசெய்கிறது. மேக் ஓஎஸ், விண்டோஸ் என்டி, ஏஐஎக்ஸ் இயக்கமுறைமைகளில் செயல்படலாம். அந்த இயக்க முறைமைகளுக்காக வடிவமைக்கப் பட்ட மென்பொருள்களையும் பயன்படுத்தலாம்.

Power PC Reference Platform : பவர்பீசி மேற்குறிப்புப் பணித்தளம் : ஐபிஎம் உருவாக்கிய திறந்தநிலை முறைமை தர வரையறை. பல்வேறுபட்ட நிறுவனங்கள் உருவாக்கிய பவர்பீசி முறைமைகளுக் கிடையே ஒத்தியல்பை உறுதி செய்வதே ஐபிஎம் இதனை வடிவமைப்பதற்கான நோக்கமாகும். தற்போதைய ஆப்பிள் பவர்பீசி மெக்கின்டோஷ் முறைமைகள் ஐபிஎம்மின் பவர் பீசி மேற்குறிப்பு பணித்தளத்துடன் ஒத்தியல்பற்றவையாய் உள்ளன. வருங்காலப் பதிப்புகள் ஒத்தியல்புடையவையாய் இருக்க வாய்ப்புண்டு. சுருக்கமாக பீ-ரெப் (PReP) என்று அழைக்கப்படுகிறது.

powerpoint : பவர்பாய்ன்ட் : மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மற்றும் மெக்கின்டோஷ் அறிமுக பிரசென்டேஷன் நிரல் தொடர். மெக்கின் டோஷ் முதல் மேசைமேல் வழங்கும் நிரல்தொடரான இது, ஒட்டு மொத்தங்கள், கைவெளியீடுகள், பேசுபவர் குறிப்புகள் மற்றும் திரைப்பட பதிவிகளை வழங்குகிறது. ஜெனிகிராபிக் படவில்லைகளுக்கான வண்ணத் தொகுதி இதனுடன் சேர்ந்து வரும.

power supply : மின்வழங்கி : மாற்று மின்னோட்ட (AC) மின் அழுத்தத்தை நேர்மின்னோட்ட (DC) மின்னழுத்தமாக மாற்றுகிற மின்சுற்றுவழி. ஒலித் துடிப்புகளும், மின்னழுத்த மாறுபாடுகளும் கணினியின் மின்சுற்று வழிகளைச் சீர்குலைக்காதவாறு ஒரு விசை வழங்கீட்டு வெளிப்பாடு கண்டிப்பாக ஒழுங்கு முறைப்படுத்தப்படுகிறது.

power surge : மின் எழுச்சி;மின்னெழுப்பி : மின்னோட்டம் பாய்தல் திடீரென அதிகரித்துச் சிறிது நேரம் நீடித்திருத்தல். இதனால், கணினிச் செயற்பாடு முறையாக இயங்குவதில் சில சிக்கல்கள் உண்டாகலாம்.

power telephone network : திறன்மிகு தொலைபேசிப் பிணையம்.

Power up : மின்னேற்றம் : மின் இணைப்பு வழங்கல் : 1. ஒரு கணினியை அல்லது புறநிலைச் சாதனத்தை இயக்குவதற்கு