பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

power user

1144

ΡRΑΜ


முடுக்கிவிடுதல். 2. விசையோட்டம் செய்யப்படுகிற போது அல்லது மின்தடங் களுக்குப் பிறகு மீண்டும் விசை யூட்டப்படுகிறபோது ஒரு கணினிச் செய்முறைப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கை இது, "விசை நிறுத்தம்" என்பதிலிருந்து வேறுபட்டது.

power user : சக்தி பயனாளர் : தனிநபர் கணினியில் மிகவும் திறமையுள்ள நபர். பலதரப் பட்ட மென்பொருள் பொதிகங்கள் பற்றிய அறிவுள்ளவர் என்பதைக் குறிப்பிடுகிறது.

pph : பிபிஎச் : 'மணிக்கு இத்தனை பக்கங்கள்'என்று பொருள்படும்“Pages per hour"என்ற ஆங்கில சொற்றொடரின் குறும்பெயர்.

PPM : பிபிஎம் : "துடிப்பு இட நிலை ஏற்ற இறக்க", "துடிப்பு நேர ஏற்ற இறக்கம்" என்று பொருள்படும்"Pulse Position Modulation", "Pulse Time Modulation"என்ற ஆங்கிலச் சொற்றொடர்களின் குறும்பெயர்.

PPP : பீபீபீ : நேரடி இணைப்பு நெறிமுறை என்று பொருள்படும் Point to Point Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். தொலைபேசி இணைப்பு வழியாக ஒரு கணினியை இணையத்தோடு இணைப்பதற்கென 1991ஆம் ஆண்டில் இணையப் பொறியியல் முனைப்புக் குழு (Internet Engineering Task Force) உருவாக்கிய தரவு தொடுப்பு நெறி முறை (Data Link Protocol). ஸ்லிப் (SLIP) நெறிமுறையை விடக் கூடுதலான தரவு ஒழுங்கு மற்றும் தரவு பாதுகாப்புக் கொண்டது. ஆனால் சற்றே சிக்கல் மிகுந்தது.

. pr : . பீஆர் : ஒர் இணைய தள முகவரி போர்ட்டோ ரீக்கோ நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

Pragmatics : செயல்துறை உறவு;நடைமுறையியல் : குறியீடுகளுக்கும். அந்தக் குறியீடுகளைப் பயன்படுத்துவோர்க்கு மிடையிலான உறவு நிலையை ஆராய்தல்.

PRAM : பிரேம் : அளபுரு ரேம் எனப்பொருள்படும் parameter RAM என்பதன் சுருக்கம். மெக்கின்டோஷ் கணினிகளில் ரேம் நினைவகத்தின் ஒரு பகுதி. கணினியின் தேதி, நேரம், திரைத்தோற்றம் மற்றும் பிற கட்டுப்பாட்டுப் பலகத்தின் அமைப்புக் கூறுகள் போன்ற