பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

P-rating

1145

precompiler


தகவமைவுத் தரவுகளை பதிந்து வைத்துள்ள ரேம் நினைவகப் பகுதி.

P-rating : பீ-தரமிடல் : பீ-தர அளவீடு : செயல்திறன் தர அளவீடு என்று பொருள்படும் perfor-mance rating என்பதன் சுருக்கம். சிரிக்ஸ் மற்றும் சில நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய நுண்செயலி தர அளவீட்டு முறை. நடப்புநிலைப் பயன்பாடுகளின் ஒட்டுமொத்தத் பலன் (throughput) அடிப் படையில் அமைந்தது. முன்பெல்லாம் நுண் செயலியின் கடிகார வேகமே தர அளவீட்டின் அடிப்படையாகக் கொள்ளப்பட்டது. சிப்புக் கட்டுமானங்களில் உள்ள வேறுபாடு, கணினியைப் பலதரப்பட்ட மக்கள் பயன்படுத்துவது போன்றவை கணக்கில் கொள்ளப்படவில்லை.

Precaution : முன்னெச்செரிக்கை.

precedence : முன்னுரிமை : ஒரு கணக்கீட்டுத் தொடரில் மதிப்புகள் கணக்கிடப்படும் வரிசை. பொதுவாக, பயன் பாட்டு நிரல்களில் பெருக்கல், வகுத்தல் முதலிலும், கூட்டல் கழித்தல் அதன்பிறகும் செய்யப் படுகின்றன. இந்த வரிசை முறையை மாற்ற வேண்டுமானால் பிறை அடைப்புக் குறிகளைப் பயன்படுத்தலாம். அடைப்புக் குறிகளுக்குள் இருப்பது முதலில் நிறைவேற்றப்படும். 344x5=23 (3+4) x5=35. காண்க : Operator Precedence.

pre decrement operator : முன் குறைப்பு செயற்குறி.

Precision : துல்லியம்;சரி நுட்பம் : ஒரு எண்ணளவினை குறித்திடும் துல்லியத்தின் அளவு. ஒரு கணிப்பு ஏறத்தாழத் துல்லியமாகச் செய்யப் படுகிறது. பை (π) என்பதன் உண்மையான மதிப்பு 3. 14162 ஆகும். இது ஆறு எண்கள் வரைத் துல்லியமானது.

precompiler : முந்தொகுப்பி : இன்னொரு கணினி செயல்முறையின் ஆதாரக் குறியீடுகளை அந்தச் செயல்முறை தொகுக்கப்படுவதற்கு அடுத்து முந்திச் செய்முறைப்படுத்துகிற கணினிச் செயல்முறை. இது அந்தச் செயல்முறைக்குப்பின் வரும் திறம்பாடுகளை அளிக்கலாம் : 1. தொகுப்பிக்கு ஏற்புடையதல்லாத வசதியான சுருக்கங்களைப் பயன்படுத்துவதற்கான திறம்பாடு;2. தொகுப்பிக்கு ஏற்புடையதாக இல்லாத, தர அளவுப்படுத்தாத

செயல்முறைப்படுத்தும்