பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

predefined function

1146

preferences


கட்டளைகளைப் பயன்படுத்து வதற்கான திறம்பாடு;3. ஒரு செயல் முறையாளர் எழுதும் ஆதார கட்டளைத் தர நிலைப்படுத்தும் திறம்பாடு.

predefined function : முன்வரையறுத்த செயற்பணி : பயன் படுத்துவோர் ஒரு செயல்முறையில் சேர்த்துக் கொள்வதற்கு உள்ள தர அளவுக் கணித நடைமுறை.

predefined process : முன் வரையறுத்த செயல்முறை : 1. வேறெங் கேனும் வரையறுக்கப்பட்டு பெயரால் மட்டுமே அடையாளங் காணக்கூடிய செய்முறை. 2முடிவுறுத்திய துணை வாலாயம்.

predefined process symbol : முன் வரையறுத்த செய்முறைக் குறியீடு : ஒரு துணை வாலாயத் தினைக் குறிப்பதற்குப் பயன் படுத்தப்படும் செவ்வகப் பாய்வு வரைபடக் குறியீடு.

predicate : பயனிலை : நிரல்தொடரில் வரும் ஒரு சொற்றொடர். இது ஒரு வெளிப்பாட்டை மதிப்பீடு செய்து தரவுவின் நிலைமையை அனுசரித்து உண்மை அல்லது பொய் என்ற பதிலைத் தரும்.

predictive reports : ஊக அறிக்கைகள்;முன் கணிப்புஅறிக்கை : திறமார்ந்த தந்திரமான முடிவுகள் எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் வணிக அறிக்கைகள்.

pre edit : முன்னிலைத் திருத்தம்.

preemptive multitasking : முற்படு பல்பணியாக்கம் : பல் பணி யாக்கத்தில் ஒருவகை. இயக்க முறைமையானது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு நிரலின் செயல்பாட்டில் குறுக்கிட்டு, கணினியின் கட்டுப் பாட்டை, காத்திருக்கும் இன்னொரு நிரலுக்கு மாற்றித்தரும். இம்முறையில், ஏதேனும் ஒரு நிரல், கணினிச் செயல்பாட்டை ஏகபோகமாய் ஆக்கிரமித்துக் கொள்வது தவிர்க்கப்படுகிறது.

preferences : முன்தேர்வுகள்;முன்னுரிமைகள்;விருப்பத் தேர்வுகள் : பெரும்பாலான வரைகலைப் பயனாளர் இடை முகங்களில், ஒரு பயன்பாட்டு நிரல் ஒவ்வொரு முறை இயக்கப் படும்போதும் எவ்வாறு செயல் படவேண்டும் என்பதை பயனாளர் வரையறுத்துக் கொள்ள முடியும். எடுத்துக் காட்டாக ஒரு சொல்செயலிப் பயன்பாட்டில் அளவுகோல் (ruler) தோன்றவேண்டுமா, கருவிப்பட்டை, நிலைமைப் பட்டை போன்றவை இருக்க