பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

presentation

1148

pressure sensitive pen


presentation : கருத்து விளக்கம்;முன் வைப்பு.

presentation graphics : அறிமுக வரைகலை;நிகழ்த்து வரை கலை : முன்வடிவுகள், திட்டங்கள், வரவு செலவுத் திட்டங்கள் ஆகியவற்றை உயர் மேலாண்மைகளுக்கு அளிப்பதில் முக்கியக் குறிப்புகளை வலியுறுத்திக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் உயர்தர வணிக வரை கலைக் காட்சியுருக்கள்.

presentation manager : அறிமுக மேலாளர் : ஒஎஸ்/2 இல் உள்ள மைக்கப்பட்ட விண்டோஸ் சூழ்நிலையில் உருவான வரைகலைப் பயனாளர் இடைமுகம் டாஸ்-க்கான சாளரத்தில் விண்டோஸில் உள்ளதுபோல இதுவும் ஒரு பயன்பாடு.

preset : முன் நிறுவுதல் : முதல் நிலைத் தகுநிலையை நிருணயித்தல். ஒரு வளைவின் கட்டுப்பாட்டு மதிப்பளவுகளை அறுதியிடுதல் அல்லது அட்டவணைகள், பதிவேடுகள் போன்ற வற்றில் முதல்நிலை மதிப் பளவுகளை நிருணயித்தல் இதற்கு எடுத்துக்காட்டு,

prespecified reports : முன்வரையறுக்கப்பட்ட அறிக்கைகள் : வேண்டும்போதோ அல்லது விதி விலக்காகவோ மேலாளர்களுக்கு கால முறைப்படி தரவுவை முன்னதாகவே வழங்குமாறு வடிவமைக்கப்பட்ட அறிக்கைகள்.

press : அழுத்து : ஒரு நுண்பொறியில் விசைப்பொத்தானை அழுத்தும் செயல்.

pressure-sensitive : அழுத்தம் உணரி : ஒரு மெல்லிய பரப்பின்மீது அழுத்தம் கொடுக்கும்போது ஒரு மின் இணைப்பு ஏற்பட்டு, கணினியால் உணர்ந்து பதிவுசெய்யும் வகையில் ஒரு நிகழ்வினை ஏற்படுத்தும் ஒரு சாதனம். தொடுஉணர்வு வரைவு பேனாக்கள், தொடுவிசைப் பலகைகள், சில தொடுதிரைகள் இந்த வகையைச் சார்ந்தவை.

pressure sensitive keyboard : அழுத்த உணர்வு;விசைப் பலகை : மின்கடத்தும் மையினாலான ஒரு மின்சுற்று வழி பொருத்தப்பட்ட, இரு மெல்லிய பிளாஸ்டிக் தகடுகளால் உருவாக்கப்பட்ட விசைப்பலகை. இது சிக்கனமானது;குட்டை வடிவமானது மலிவான பல துண்கணினிகளில் பயன்படுத்தப்படுகிறது.

pressure sensitive pen : அழுத்த உணர்வுப் பேனா : ஒர் எண்ணாக்கியின் உதவியுடன் பயன்படுத்தப்படும் பேனா.