பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

automatic dictionary

114

automatic programming


automatic dictionary : தானியங்கு அகராதி; தானியங்கு அகரமுதலி.

automatic digital network : தானியங்கு இலக்கமுறை பிணையம்.

automatic error correction : தானியங்கு பிழை திருத்தம் : தரவு அனுப்புதலில் ஏற்படக் கூடிய அல்லது அமைப்பிலேயே ஏற்படக் கூடிய தவறுகளைக் கண்டுபிடித்து சரி செய்யும் உத்தி.

automatic feature negotiation : தானியங்கு ஏற்புத் தன்மை : எதிர்முனையில் உள்ள மோடெத்தின் வேகம், பிழை கட்டுப்பாடு மற்றும் தகவல் சுருக்குதல் முறைக்கேற்பத் தன்னை சரி செய்து கொள்ளும் மோடெத்தின் திறன்.

automatic hardware dump : தானியங்கு வன்பொருள் திணிப்பு.

automatic hyphenation : தானியங்கி ஒட்டுக்குறியமைத்தல் : சொற்களின் இடையில் தானாகவே சிறுகோடு அமைக் கும் தன்மை. சொல் செயலி மற்றும் பக்க வடிவமைப்பு மென்பொருள்களில் அதிகம் காணப்படுவது.

automatic interrupt : தானியங்கு இடைமறிப்பு : தானியங்கு குறுக்கீடு.

automatic loader : தானியங்கு ஏற்றி : வன்பொருள் இயக்கத்தைத் தொடங்கி வைக்கும் நிரல்.

automatic message switching : தானியங்குச் செய்தி இணைப் பாக்கம்.

automatic message switching : தானியங்குச் செய்தி இணைப் பாக்கம்.

automatic network switching : தானியங்கு பிணைய இணைப் பாக்கம்.

automatic pagination : தானியங்கி பக்கமமைத்தல் : செய்தி வரிகளைப் பக்கவாரியாகத் தானாகவே பிரிக்கும் தன்மை. சொல்செயலி மற்றும் பக்க வடிவமைப்பு மென்பொருள்களில் காணப்படுவது.

automatic programming தானியங்கு நிரலாக்கம் : 1. நிரல் ஒன்றைத் தயாரிப்பதில் சில நிலைப் பணிகளைச் செய்யக் கணினி மூலமே நிரலை உருவாக்குதல் 2. எந்திர மொழி நிரல் ஒன்றை குறியீட்டுத் தொகுப்பின் வழிகாட்டுதலின் பேரில் தயாரித்தல்.