பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

prestel

1149

primary colours


இதில் ஒரு அழுத்த நுண்ணிடை இயக்கமானி அடங்கியுள்ளது. இது எழுதும் அழுத்தத்தை உணர்ந்தறிந்து z-அச்சுத் தரவுவாக அனுப்புகிறது.

prestel : பிரெஸ்டெல் : இங்கிலாந்திலுள்ள வணிகமுறை ஒளிப்பேழை வாசகச் சேவைமுறை.

prety print : அழகு அச்சு; ஒழுங்கு அச்சு : அச்சிடும்போது நிரல் கட்டளைகளை எளிதாகப் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கும் வசதி சில உரைத்தொகுப்பான்களில் உள்ளன. (எ-டு) நிரல் கூறுகளுக்கிடையே ஒரு வெற்று வரி சேர்த்தல், பின்னல் நிரல் கூறுகளுக்கு ஒர இடம்விடல், சில கட்டளை அமைப்புகளில் வரிகளை உள்ளடங்கி அமைத்தல்.

preventive maintenance : தடுப்புப் பராமரிப்பு; தவிர்நிலை பேணல் : சாதனங்களைத் தொடர்ந்து செயற்பாட்டு நிலையில் வைத்து வருவதற்கு உதவ ஒரு கணினியில் பயன்படுத்தப்படும் செய்முறைகள். தவறுகள் நேர்வதற்கு முன்பு அவற்றைக் கண்டுபிடித்து, தனிமைப்படுத்தி, திருத்தம் செய்வதற்கு இவை உதவுகின்றன. சாதனங்களை இயல்பு நிலையிலும் பழுது நிலையிலும் துப்புரவு செய்தல், சரியமைவு செய்தல், சோதனை செய்தல் போன்றவை இதில் அடங்கும்.

preview : முன்காட்சி : சொல்செயலி மற்றும் பிற பயன்பாடுகளில் உள்ள ஒரு வசதி. ஓர் ஆவணத்தை அச்சிடுவதற்கென வடிவமைத்தபின் நேராக அச்சுப்பொறிக்கு அனுப்பாமல், அச்சிடப்போகும் அதே வடிவமைப்பில் கணினித் திரையில் காணலாம். பயனாளருக்கு மனநிறைவு ஏற்படின் அப்படியே அச்சுப்பொறிக்கு அனுப்பிவிடலாம்.

previous : முற்பட்ட, முந்தைய.

previous page button : முந்தைய பக்கப் பொத்தான்.

primary and extended : முதன்மை மற்றும் நீட்டிப்பு.

primary channel : முதன்மைத்தடம் : இணக்கி போன்ற தகவல் தொடர்புச்சாதனத்தில் தரவு அனுப்பு தடத்தின் பெயர். primary cluster : அடிப்படைத்தொகுதி, முதன்மைத் தொகுதி : தனியொரு அட்டவணை அமைவிடத்தைச் சுற்றி அட்டவணை பதிவுகளைத் திரட்டுதல்.

primary colours : அடிப்படை வண்ணங்கள் : மற்ற வண்ணங்கள் அனைத்தையும் உருவாக்கக் கூடிய அடிப்படையான