பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

printer format

1156

printer, quality


ஒர் எழுத்துரு. இத்தகைய எழுத் துருக்கள் அச்சுப் பொறிக்குள்ளேயே உள்ளமைக்கப் பட்டிருக்கலாம். பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எழுத்துருப் பொதியுறைகளிலும் கிடைப்பதுண்டு.

printer format : அச்சடிப்பி உருப்படிவம் : அச்சுப் படிவம் : அச்சடிப்பு மண்டலங்களாகப் பகுக்கப்பட்ட அச்கத்தாள். ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு மதிப்பளவினை மட்டுமே அச்சடிக்க முடியும்

printer head : அச்சுமுனை.

printer interface : அச்சு இடைப்பிணைப்பு.

printer interrupt : அச்சுப்பொறி குறுக்கீடு : “Not Pusy"சமிக்கையை அச்சுப்பொறி அனுப்பும்போது ஏற்படும் வன்பொருள் குறுக்கீடு. குறுக்கீடும் வாலாயமானது. பொதுவாக வெளியீட்டுத் தரவுவின் எழுத்தை அச்சுப் பொறிக்கு அனுப்பிவிட்டு கட்டுப்பாட்டை மையச் செயலகத்துக்கு அனுப்பும். இந்த நடைமுறையானது அச்சுப்பொறியை இயக்கும் அதேவேளையில் கணினியை வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்தும்.

printer layour sheet : அச்சுப் பொறி உருவரைத் தாள்.

printer, line : வரி அச்சுப்பொறி.

printer maintenance : அச்சுப்பொறி பாராமரிப்பு.

printer, matrix : அணி அச்சுப்பொறி.

printer, page : பக்க அச்சுப்பொறி.

printer port : அச்சுத்துறை;அச்சுப் பொறித்துறை : ஒரு சொந்தக் கணினியில் ஒரு அச்சுப் பொறியை இணைக்கக் கூடிய இடம். பீசி ஒத்தியல்புக் கணினிகளில் பெரும்பாலும் இணைநிலைத் துறைகளே (parallel ports) அச்சுத் துறையாக பயன்படுத்தப்படுகின்றன. இயக்க முறைமை, இதனை எல்பீடீ (LPT) என்னும் தருக்க சாதனப் பெயராக அடையாளம் காண்கிறது. சில அச்சுப்பொறிகளுக்குத் நேரியல் துறைகளை யும் (serial ports) பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் முன்கூட்டியே இயக்க முறைமைக்கு இதை உணர்த்திவிடவேண்டும். ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் பெரும்பாலும் நேரியல் துறைகளே அச்சுப்பொறிக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

printer, quality : அச்சுத்தரம்.