பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

printer service

1157

print layout sheet


printer service : அச்சுப்பொறி வழங்கி : ஒன்று அல்லது மேற்பட்ட அச்சுப்பொறிகளைக் கட்டுபடுத்தும் கட்டமைப்புள்ள ஒரு கணினி. அந்த அமைப்பின் அனைத்துப் பயனாளர்களிட மிருந்தும் வருகின்ற வெளியீட்டு அச்சுத் தோற்றத்தினைச் சேமித்து ஒரு நேரத்தில் ஒரு வேலை என்ற வகையில் அச்சுப் பொறிக்கு வழங்குவது. இப்பணியானது பிணைய (Network) இயக்க அமைப்பின் ஒரு பகுதியாகவோ அல்லது சேர்க்கப் பட்ட பயன் பாடாகவோ இருக்கலாம்.

printer stand : அச்சடிப்பி நிலையடுக்கு : ஒர் அச்சடிப்பித் தாங்கி யிருப்பதற்காக வடிவமைக்கப்பட்ட மரத்தாலான நிலையான அடுக்கு விசிறி மடிப்பு. அச்சடிப்பி காகிதத்திற்காக உச்சிப்பகுதியில் ஒரு திறப்பினைக் கொண்டிருக்கும்.

printer, thermal : வெப்ப அச்சுப்பொறி.

printer, wheel : சக்கர அச்சுப்பொறி.

printer, wire : கம்பி.

print head : அச்சு முனை : புள்ளி அச்சுருவாக்கிய டாட் மாட்ரிக்ஸ்; இங்க் ஜெட், தெர்மல் அச்சுப்பொறி போன்றவற்றில் உள்ள அச்சு ஊடகத்தில் தோற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பு. அச்சு ஊடகத்தின் ஒரு பக்கத்திலிருந்து வேறொன்றுக்கு அச்சுமுனை மாறுவது வழக்கம்.

print image : அச்சு உருவம் : பேசிக் மொழியில்'Print Using' சொற்றொடரில் அச்சிட்ட வெளியீட்டை வடிவமைக்கப் பயன்படும் சரம்.

printing station : அச்சிடும் நிலையம்.

print job : அச்சுப் பணி : பல எழுத்துகள் சேர்ந்து ஒரே தொகுதியாக அச்சிடப்படுதல். ஒர் அச்சுப்பணி என்பது பெரும்பாலும் ஆவணத்தை அச்சிடும் பணியாக இருக்கும். அந்த ஆவணம் ஒரு பக்கமாக இருக்க லாம்;நூறு பக்கங்களைக் கொண்டதாகவும் இருக்கலாம். ஒவ்வொரு ஆவணத்தையும் தனித்தனியாக அச்சிடுவதைத் தவிர்க்க, சில மென்பொருள் கள், பல ஆவணங்களை ஒரு குழுவாகச் சேர்த்து ஒரு அச்சுப்பணியாகச் செய்வதும் உண்டு.

print layout sheet : அச்சு விரிவமைப்புத் தகடு;அச்சமைப்புத் தாள் :

ஒர் அச்சிட்ட அறிக்கைக்குக் தேவையான ஒர விளிம்புகளையும் இடை