பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

print medium

1158

print screen key


வெளிகளையும் அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் வரைபடம்.

print medium : அச்சு ஊடகம் : அச்சிடப்பட்ட தோற்றம் வெளி வரக்கூடிய மேற்பரப்பு. பெரும் பாலானவற்றில் அச்சு ஊடகம், காகிதம்தான்ய ஆனால், நுண் படல அட்டைகள், ஊடுருவு ஒளிப்படம் போன்றவையும் ஊடகமாக அமையும்.

print mode : அச்சுப் பாங்கு : அச்சு வெளியீட்டின் வடிவமைப்பைக் குறிக்கும் பொதுவான சொல். நீளவாக்கில் (portrait), அகலவாக்கில் (landscape) அச்சிடலாம். எழுத்தின் தரம், உருவளவு ஆகியவற்றையும் இச்சொல் குறிக்கும். புள்ளியணி அச்சுப்பொறி (dot. matrix printer) இரண்டு வகையான அச்சுப் பாங்குகள் உள்ளன. எழுத்துத்தரம் (Letter Quality-LQ), உயர் எழுத்துத் தரம் (Near Letter Quality-NLQ). சில அச்சுப்பொறிகள் ஆஸ்கி மற்றும் போஸ்ட்கிரிப்ட் எழுத்து வடிவங்களையும் ஏற்கும்.

printout : அச்சுப்படிவம் : கணினியமைவு வெளிப்பாட்டின் படிவம். இது ஒர் அச்சடிப் பானால் ஒரு பக்கத்தில் அச்சிடப்படுகிறது.

print position : அச்சு நிலை.

print preview : அச்சு முங்காட்சி.

print quality : அச்சுத் தரம் : அச்சடிப்பியில் அச்சிடப்பட்ட ஒர் அச்சுப் படிவத்தின் தரம்.

print queue : அச்சு வரிசை : அச்சுப்பொறிக்காக ஒதுக்கப்பட்ட வெளியீட்டை அச்சுப்பொறி ஏற்கும்வரை வைத்திருக்கும் வட்டின் இடம்.

print screen : அச்சுத் திரை : திரையில் அப்போது உள்ள உருவத்தை அச்சிடும் திறன்.

print screen key : திரை அச்சு விசை : ஐபிஎம் பீசி மற்றும் ஒத்தியல்புக் கணினிகளின் விசைப்பலகைகளில் இருக்கும் ஒரு விசை. இவ்விசையை

அழுத்தும்போது திரையில் தோற்றமளிக்கும் எழுத்துகளை அப்படியே அச்சுப்பொறிக்கு அனுப்பிவைக்கும். விண்டோஸ் இயக்க முறைமையில் இந்த விசையை அழுத்தினால் திரைத் தோற்றம் கிளிப்-போர்டில் பதியும். அதனை ஒரு வட்டுக் கோப்பாகச் சேமிக்கலாம். மாற்று (Alt) மற்றும் திரையச்சு (print screen) ஆகிய இரு விசைகளையும் சேர்த்து அழுத்தினால் இயக்கத்தில் இருக்கும் சாளரம் (Active Window) மட்டும் கிளிப்