பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

privileged mode

1163

problem definition


privileged mode : சலுகைபெற்ற பாங்கு : இன்டெல் 80286 மற்றும் அதனினும் மேம்பட்ட நுண்செயலிகளின் பாதுகாக்கப் பட்ட இயக்கப் பாங்கில் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு சிறப்பு வகை இயக்கப்பாங்கு. இதில், நினைவகம் மற்றும் உள்ளிட்டு/வெளியீட்டுத் துறைகள் (தடங்கள்) போன்ற கணினியின் உயிர்நாடியான உறுப்புகளைக் கையாளும்போது, மென்பொருள்கள் மிகவும் வரம்புக்குட்பட்ட செயல்பாடுகளையே நிறைவேற்ற முடியும்.

PRN : பீஆர்என் : அச்சுப் பொறியின் தருக்கமுறைச் சாதனப்பெயர். டாஸ் இயக்க முறைமையில் வழக்கமான அச்சு சாதனத்துக்கென ஒதுக்கப்பட்ட பெயர். பீஆர்என் என்பது பெரும்பாலும் கணினியின் முதல் இணை நிலைத்துறையை (parallel port) குறிக்கும். எல்பீடி1 என்றும் அறியப்படும்.

probabilistic model : நிகழ்தகவு உருமாதிரி : நிகழ்தகவுக் கணிதத்தைப் பயன்படுத்துகிற உருமாதிரி. எந்தத் தரவுகளின் தனி மதிப்பளவுகள் அறியப் படாமலிருந்து, ஆனால் அவற்றின் நீள் வீச்செல்லை நடவடிக்கையை ஊகிக்க முடியுமோ அந்தத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.

probability : நிகழ்தகவு : ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிகழ்வதற்கான வாய்ப்புகளைக் கணக்கிடுதல். எடுத்துக்காட்டு : ஒரு நாணயத்தைச் சுண்டி விட்டால் தலைவிழுவதற்கான நிகழ்தகவு 1/2, பூ விழுவதற்கான நிகழ் தகவு 1/2;0-9 வரைக் குறியிடப்பட்ட 10 சிப்புகளை ஒன்று கலந்து மேசையில் போட்டு ஆறுக்கு மேற்பட்ட எண்ணுடைய ஒரு சிப்பினை எடுப் பதற்கான நிகழ்தகவு 3/10 ஆகும்.

probability theory : நிகழ்தகவுக் கோட்பாடு : ஒரு தற்செயல் நிகழ்ச்சி நிகழ்வதற்கான வாய்ப்புகளின் அளவீடு. இது ஒரு குழுமத்தின் நடத்தை முறையை ஊகிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

problem analysis : சிக்கல் பகுப்பாய்வு : ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண ஒரு திட்டத்தைப் பயன்படுத்துதல். செயல்முறை உருவாக்கச் சுழற்சியில் முதல் நடவடிக்கை.

problem defining : சிக்கல் வரையறுத்தல்.

problem definition : சிக்கல் வரையறை : 1. ஒரு சிக்கலை