பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

processor, micro

1168

product


பதற்கான அளவு. 1. 0 சுமை என்பது ஒரு செயலகம் ஒரு கடிகாரத்தின் ஒவ்வொரு சுழற்சியின் போதும் ஒரு வேலையைச் செய்தது என்று பொருள். 1. 0-க்குக் கீழான சுமை என்றால் செயலக நேரம் வீணாக்கப் படுகிறது என்பது பொருள். 1. 0. வுக்கு மேல் செயலக சுமை என்றால் ஒரு செயலகம் அப்போது கையாளும் சுமையை விட அதிகமாகச் செல்ல முடியும் என்பது பொருள்.

processor, micro : நுண்செயலி.

processor, remote : தொலை நிலைச் செயலி.

processor, word : சொல் செயலி.

process signal : செய்முறைக் குறிகை;செய்முறை சமிக்கை.

procomm : புரோகாம் : டேட்டா ஸ்டோர்ம் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற பீசி பங்குப் பொருள் தகவல் தொடர்புநிரல் தொடர். பல வகையான நடைமுறைகள் மற்றும் முகப்புகளை அது ஆதரிக்கும். புரோகாம் பிளஸ் என்பது கூடுதல் தன்மைகள் உள்ள வணிகத் தொகுப்பு.

Prodigy information Service : மேதமை தகவல் சேவை : ஐபிஎம் மற்றும் சியர்ஸ் இரண்டும் சேர்ந்து உருவாக்கிய நிகழ்நிலை தகவல் சேவை. இதன் போட்டியாளர்களான அமெரிக்கா ஆன்லைன் மற்றும் காம்பு செர்வ் ஆகியவற்றைப் போலவே, தரவுத் தள அணுகல், கோப்பு நூலகங்கள், நிகழ்நிலை அரட்டை, சிறப்பு ஆர்வக் குழுக்கள், மின்னஞ்சல், இணைய இணைப்பு போன்ற சேவைகளை வழங்கி வருகின்றது.

product : பெருக்குத் தொகை;பண்டம்;அட்டவணைப் பெருக்கல் :

1. கணிதத்தில் இரண்டு அல்லது மேற்பட்ட எண்களைப் பெருக்கிவரும் தொகை 2. வடிவமைத்து உருவாக்கப்பட்டு விற்பனைச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் ஒரு பண்டம். 3. தரவுத்தள மேலாண்மை அமைப்பில் பயன்படுத்தப்படும் ஒரு செயற்குறி (operator). இரு அட்ட வணைகளைப் பெருக்கும் போது முதல் அட்டவணையிலுள்ள ஒவ்வொரு கிடக்கையும் இரண்டாவது அட்டவணையின் ஒவ்வொரு கிடக்கையுடனும் இணைந்து மூன்றாவதாக ஒர் அட்டவணை உருவாக்கப்படும். 10, 20 கிடக்கைகள் உள்ள அட்டவணைகளைப் பெருக்கினால் 200 கிடக்கைகள் உள்ள அட்டவணை கிடைக்கும்.