பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

profile

1170

programmable logic



பீசி சொல் செயலகங்களில் ஆரம்பத்தில் தோன்றிய ஒன்று.

profile : விவரக் குறிப்பு : ஒரு நிரலின் பல்வேறு பகுதிகள் இயங்குவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது என்பதைத் தீர்மானித்து பகுப் பாய்வு செய்வதற்கான விவரக்குறிப்பு.

profiling service : பயனாளர் குறிப்புச் சேவை.

programmable : நிரல்படு; நிரலாக்கத் தகு : ஒரு பணியை அல்லது ஒரு செயல்பாட்டை நிறைவேற்ற, நிரல்களை ஏற்றுச் செயல்படும் நிலை. நிரலாக்கத் தகுநிலையில் இருப்பது என்பது கணினியின் பண்புக் கூறுகளில் ஒன்று.

programmable calculator : செயல்முறைப்படுத்தத்தக்க கணிப்பிகள் : கணினி போன்ற அம்சங்களைக் கொண்ட சில கணினிகளுடன் கூடிய கணிப்பி போன்ற சாதனம். பேசிக்மொழியில் எழுதப்ப்ட்ட சேமித்து வைக்கப்பட்ட செயல்முறையை நிறைவேற்றக் கூடிய கணிப்பி இதற்கு எடுத்துக் காட்டு.

programmable communication interface : செயல்முறைப் படுத்தத்தக்க செய்தித் தொடர்பு இடைமுகப்பு : செய்தித்தொடர்புக் கட்டுப்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் இடை முகப்புப் பலகை.

programmable function key : செயல்முறைப்படுத்தத்தக்க செயற்பணித் திறவுகோல் : கணினியிலுள்ள செயல்முறையோடு சேர்ந்து மாறுகிற செயற்பணியைக் கொண்ட விசைப் பலகை திறவுகோல்.

programmable interrupt controller : நிரல்படு குறுக்கீட்டுக் கட்டுப்படுத்தி : குறுக்கீட்டுக் கோரிக்கைகளை (IRQs) கையாளும் இன்டெல் சிப்பு. அதிக அளவாக 15 ஐஆர்கியூக்களை கையாளக்கூடிய இரண்டு நிரல்படு குறுக்கீட்டுக் கட்டுப் படுத்திகள் ஐபிஎம் ஏடீ கணினிகளில் பயன்படுத்தப்பட்டன. பின்னாளில் இவற்றுக்குப் பதிலாக மேம்பட்ட நிரல்படு குறுக்கீட்டு கட்டுப்படுத்தி (APIC) கள் பயன்படுத்தப்பட்டன. இவை பல்பணியாக்கத்தை ஏற்கின்றன.

programmable logic array : செயல்முறைப்படுத்தத்தக்க தருக்கமுறை வரிசை : ஒரு குறிப்பிட்ட உட்பாடுகளின் தொகுதிக்கு வெளிப்பாடுகளுடன்கூடிய ஒரு பகுதிப் பொருளின் கூட்டுத்தொகையைக் கொடுக்கும் சாதனம்.