பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

programmed check

1173

programmed instruction



பினை (executable file) தயார் செய்யும் செயல்முறை. வழக்கமாக, நிரல் உருவாக்கம் மூன்று படிநிலைகளைக் கொண்டது. (1) உயர்நிலை மொழியிலுள்ள மூலக் குறிமுறையை சிப்பு மொழி மூலக்குறிமுறையாக மொழிமாற்றுதல். (2) சிப்பு மொழிக் குறிமுறையை பொறி மொழி இலக்குக் கோப்புகளாக மாற்றியமைத்தல். (3) பொறி மொழிக் குறிமுறை இலக்குக் கோப்புகளை பல்வேறு தரவு கோப்புகள், இயக்க நேரக் கோப்புகள், நூலகக் கோப்புகளுடன் தொடுப்பு ஏற்படுத்தி இயக்குறு கோப்பாக மாற்றியமைத்தல்.

programmed check : செயல்முறைப்படுத்திய கட்டுப்பாடு : ஒரு சிக்கலுக்கான செயல் முறைப்படுத்திய அறிக்கையில் இடைச் செருகல் செய்யப்பட்டு கணினி நிரல்களைப் பயன் படுத்தி நிறைவேற்றப்படும் ஒய்வுகள் அடங்கிய கட்டுப்பாடு.

programme deck : செயல்முறை அடுக்கு : ஒரு கணினி செயல் முறையில் அடங்கியுள்ள நிரல்களைக் கொண்ட துளையிட்ட அட்டைகளின் தொகுதி.

programmed decision : முன் கூட்டி வரையறுக்கப்பட்ட தீர்வு : ஒரு குறிப்பிட்ட முடிவு தேவையென்றால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்னரே வரையறுக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் தானியங்கியாக எடுக்கக்கூடிய முடிவு.

programme development cycle : செயல்முறை மேம்பாட்டுச் சுழற்சி : ஒரு கணினிச் சிக்கல் பகுப்பாய்வின் உதவியுடன் ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண்பதில் அடங்கியுள்ள படிமுறைகள். பதின்ம முறை எண்மான மேம்பாட்டுக் குறியீட்டுச் செயல்முறைச் சோதனை. ஆவணமாக்கம், ஒப்படைவு ஆகியவை இதில் அடங்கும்.

programme documentation : நிகழ்ச்சி நிரல் ஆவணப் படுத்துகை

programmed instruction : செயல்முறைப்படுத்திய நிரல் : ஒரு குறிப்பிட்ட பாடத்தைக் கற்பிப்பதற்கான குறிப்பிட்ட நிரல்களின் வரிசைமுறை. பல்வேறு கணினிச் செயல்முறைப்படுத்தும் பயிற்சி வகுப்புகள் உள்ளடங்களாக கல்வித்துறைகளில் செயல்முறைப்படுத்திய நிரல் உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் உள்ளார்ந்த பின்னூட்ட வசதி இருப்பதால்