பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

programmers switch

1176

programme statement



வில் பயன்படுத்துவதற்காக எழுதிப் படிக்கமட்டுமேயான நினைவகத்தை (PROM) அல்லது அழித்து எழுதிப் படிக்க மட்டுமேயான நினைவகத்தை (EPROM) செயல்முறைப்படுத்து வதற்கு அனுமதிக்கிற பலகை.

programmers switch : நிரலர் விசை; நிரலர் நிலைமாற்றி : ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் இருக்கும் இணைப் பொத்தான்கள். கணினியை மீட்டியக்கவும் (reboot), இயக்க முறைமையின் அடிநிலைச் செயல்பாட்டில் கட்டளைவரி இடைமுகத்துக்கு மாறவும் இந்தப் பொத்தான்கள் பயன்படுகின்றன. தொடக்கக் காலங்களில் மென்பொருளை பரிசோதிக்கும் நிரலர்களுக்கே இத்தகைய செயல்பாடுகள் தேவைப்பட்டன. எனவே மெக்கின்டோஷின் தொடக்க மாதிரியங்களில் கணினிப் பெட்டியின் உள்ளே இந்தப் பொத்தான்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. பிற்காலக் கணினிகளில் அவை வெளிப்படையாகவே வைக்கப்பட்டன. மீட்டியக்கு பொத்தான் இடப்புறம் திரும்பிய முக்கோணக்குறியாலும் மற்றது ஒரு வட்டக்குறியாலும் குறிக்கப் பட்டிருக்கும்.

programmes : நிரல்கள்.

programme, segmented : துண்டமாக்கிய நிரல்.

programme, service : பணிநிரல்.

programme, source : மூலநிரல்.

programme specifications : செயல்முறைக் குறியீடுகள் : ஒரு பொறியமைவின் தகவல் தேவைப்பாடுகள், தேவைப்படும் கோப்புகள், உட்பாட்டு வெளிப்பாட்டுக் குறிப்பீடுகள், செய்முறை தரவுகள் ஆகிய வற்றை அடையாளங் காட்டுகிற ஆவணம்.

programme stack : செயல்முறை அடுக்கு : தரவுகளையும் நிரல்களையும் குறிப்பாக ஒர் இடைத்தடுப்பின்போது தற்காலிகமாகச் சேமித்து வைப்பதற்குக் கணினி நினைவகங்களில் ஒதுக்கப்பட்டுள்ள பகுதி.

programme state : நிரல்தொடர் நிலை : பயன்பாட்டு நிரல் தொடரில் நிரல்களை நிறைவேற்றுகின்ற கணினியின் இயக்கமுறை.

programme statement : நிரல்தொடர் அறிக்கை : உயர் நிலை நிரல் தொடரமைப்பு மொழியில் மரபுத் தொடர். நிரல் தொடர் தொகுக்கப்படும்போது நிரல் தொடரின் ஒரு சொற்றொடர் பல எந்திர நிரல்களை உருவாக்கும்.