பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

programme step

1177

programming



programme step : செயல் முறைப்படி நிலை; நிரல்தொடர் படி : எந்திர மொழி நிரல் அல்லது சேர்ப்பிமொழி நிரல் போன்ற ஆரம்ப நிரல். Programme statement என்பதுடன் வேறுபடுத்துக.

programme stop : செயல்முறை நிறுத்தம் : செயல்முறையினுள் அமைக்கப்பட்டுள்ள நிறுத்த நிரல். இது சில நிலைகளில் ஒரு சிக்கலுக்குத் தீர்வுகாணும் செய்முறை முடிவுற்றதும் கண்னியின் இயக்கத்தைத் தானாகவே நிறுத்திவிடுகிறது.

programme storage : செயல்முறைச் சேமிப்பகம் : செயல்முறை வாலாயங்களையும் துணை வாலாயங்களையும் சேமித்து வைப்பதற்கு உள்முகச் சேமிப்பகத்தில் ஒதுக்கப் பட்டுள்ள பகுதி. பல பொறியமைவுகளில் உள்ளடக்கங்களைத் தவறுதலாக மாற்றிவிடுவதைத் தடுப்பதற்குப் பாதுகாப்புச் சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

programme, supervisory : மேற்பார்வை நிரல்.

programme switch : செயல்முறை விசை : ஒரு செயல் முறைப்படுத்தும் வாலாயத்தில் இருவகை நடவடிக்கைப்போக்குகள் நடைபெறுவதை இயல்பிக்கும் முனை. இவற்றில் எது சரியானது என்பதை செயல்முறையில் வேறெங்கேனும் உள்ள ஒரு நிலை அல்லது பொறியமைவின் ஒர் உறுப்பு நிருணயிக்கிறது.

programme, test : சோதனை நிரல்.

programme testing : செயல்முறைச் சோதனை : ஒரு செயல் முறை எதிர்பார்க்கும் செயற்பணிகளைச் செய்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக ஒரு செயல்முறையை நிறை வேற்றுதல்.

programme, utility : பயன்கூறு நிரல்.

programming : செயல்முறைப்படுத்தல் : ஒரு சிக்கலை அதன் இயற்பியல் சூழலிலிருந்து கணினி ஏற்றுக்கொண்டு, அடிபணியக் கூடிய ஒரு மொழியில் மொழிபெயர்ப்பதற்கான ஒரு செய்முறை. அதாவது ஒரு செயல்முறையை வடிவமைத்து எழுதி சோதித்துப் பார்த்தல்; ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான நடைமுறையைத் திட்டமிடுதல். இதில் சிக்கலைப் பகுப்பாய்வு செய்தல், அச்சிடுதலுக்குக் குறியிடுதல், உட்பாட்டு/வெளிப்பாட்டு உரு