பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

auto - redial

117

autostart


பிணையம் ஒன்றில் வன்பொருளும் மென்பொருளும் இணைந்து இச்சோதனையை மேற்கொள்கின்றன.

auto - redial : தானியங்கு மறு சுழற்றி : அழைக்கப்பட்ட தொலைபேசி கிடைக்கும்வரை மீண்டும் எண் சுழற்றுவதற்கான மோடெம் ஒன்றின் பண்புக்கூறு.

auto - repeat : தானியங்கு திரும்பசெயல் : தானியங்கு மீள் செயற்பாடு : சில விசைப் பலகைகளின் பண்புப்படி சில விசைகளை அழுத்தினால் அவற்றின் செயல்கள் தானியங்கு முறையில் மீண்டும் செய்யப்படுகின்றன.

auto-restart : தானியங்கு மீள் தொடக்கம்; தானியங்கு தொடக்கம் : கருவி பழுதுபட்டாலோ மின்சாரம் தடைப்பட்டாலோ மீண்டும் சீராகும் பொழுது பணிகளைத் தொடரத் தயார் நிலையை அடைவதற்கான நடவடிக்கைகளைத் தானியங்கு முறையில் நிறைவேற்றுவதற்கான கணினி ஒன்றின் திறன்.

auto resume : தானே தொடர்ந்தல் : கணினியில் ஒரு இடத்தில் நிறுத்தி விட்டுப் பின்னர் தொடர்ந்து அனுமதிக்கும் தன்மை. பயன்பாடுகளை இரண்டாவது தடவை மேலேற்றத் தேவையில்லை. நினைவு விவரங்கள் வட்டில் சேமிக்கப்பட்டோ அல்லது மின்சார பேட்ரி மூலம் தயார் நிலையில் வைக்கப்பட்டோ இருக்கும். மடிக் கணினி மற்றும் கையேட்டுக் கணினிகளில் இத்தன்மை பெரும்பாலும் காணப்படும்.

autosave : தானியங்கிச் சேமிப்பு : பயனாளர் தலையிடாமல் தொடர்ச்சியான இடைவெளிகளில் தகவல்களை வட்டில் சேமித்தல்.

autoscore : தானே கோடிடல் : சொல் செயலியில், எழுதப்பட்ட பகுதியில் அடிக்கோடிடுவதற்கான ஆணை.

autoserve : தானியங்கு வழங்கல்.

autoshapes : உடனடி வடிவங்கள்.

autosizing : தானே அளவமைத்தைல்  : ஒரு அமைப்பிலிருந்து வேறு ஒன்றுக்கு மாறும்போது அதே செவ்வக உருவத் தோற்றத்தை வைத்துக் கொள்ளும் முகப்பின் திறன்.

autostart : தானே தொடங்குதல் : சில வணிக நுண் கணினிகளில் ரோம் நினைவகத்தில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு குறியீடு, கணினியை இயக்கியவுடன் இது இயக்க முறைமையை மேலேற்றி உடனே செயல்படத் தயாராக்கும். இவ்