பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

proof

1182

property sheet



நடவடிக்கையினை மேற்கொள்வது என்பதைப் பயன்படுத்துபவருக்குத் திரையில் காட்டுகிற எழுத்து.

proof : பிழைத்திருத்தப் படி : வெளியிடுவதற்குச் சரியாக இருக்கிறதா என்று சோதிக்கப் பயன்படும் ஒரு பக்கம் அல்லது வெளியீட்டின் சோதனை நகல்.

proofing programme : பிழை திருத்தச் செயல்முறை : அகராதிச் செயல்முறை அல்லது எழுத்துப் பிழைத் திருத்தம் போன்றது.

proof reader's marks : பிழை திருத்துபவரின் குறியீடுகள் : ஒரு பிழைதிருத்தப்படியில் திருத்தங்கள் அல்லது பிழைகள் உள்ளன என்பதைக் குறிப்பிடும் குறியீடுகள். டிடீபீயில் பயன்படுவது.

propagated error : பெருகிய பிழை; பரவும் பிழை; பரப்பிய பிழை : ஒரு செயற்பாட்டில் ஏற்பட்ட பிழை இன்னொரு செயல்பாட்டுக்கு உள்ளீடாக அமைதல். இதனால் புதிதாக இன்னொரு பிழை உருவாகும்.

propagation : பரவுதல் : ஓரிடத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்குப் பரவுதல்.

propagation delay : பரப்புகைக் காலத்தாழ்வு; பரப்புகைச் சுணக்கம் : ஒரு செயற்கைக்கோள் செய்தித் தொடர்புப் பொறியமைவில் ஏற்படும் காலத்தாழ்வு.

properties : பண்பியல்புகள்; பண்புகள்.

properties and methods : பண்புகள் மற்றும் வழிமுறைகள்.

property : பண்பு; பண்பியல்பு : விண்டோஸ் குடும்ப (95/98/ எம்இ/என்டி/2000) இயக்க முறைமைகளில் ஒரு பொருள் அல்லது சாதனத்தின் பண்பியல்பு அல்லது அளபுருவைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு கோப்பின் பண்புகள் அதன் வகை, அளவு, உருவாக்கப் பட்ட நாள் போன்றவற்றை குறிக்கின்றன. அந்த கோப்பின் பண்பியல்புத்தாளில் இது போன்ற விவரங்களை அறியலாம்.

property sheet : பண்புத் தாள் : விண்டோஸ் 95 மற்றும் அதன் குடும்ப இயக்க முறைமைகளில் இருக்கும் ஒரு வகை உரையாடல் பெட்டி. File என்ற பட்டித் தேர்வில் அல்லது ஒரு பொருள்மீது வலது சொடுக்கில் வரும் பட்டித் தேர்வில் Properties என்பதை தேர்வு செய்வதன் மூலம் இந்த உரையாடல் பெட்டியைப் பெற முடியும். இதில் ஒரு கோப்பு, பயன்பாடு