பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

proportion

1183

proprietary software



அல்லது வன்பொருள் சாதனத்தின் பண்புக் கூறுகள் அல்லது தகவமைவுகள் பட்டியலிடப்பட்டிருக்கும். பெரும்பாலும் பண்புத் தாள், ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கிய அடுக்குத்தாள் அமைப்பில் இருக்கும். ஒவ்வொரு தாளிலும் உரையாடல் பெட்டிகளில் காணப்படும் வழக்கமான கட்டுப்பாடுகள் இடம் பெற்றிருக்கும். பயனாளர் விருப்பப்படி அளபுருக்களை அமைத்துக் கொள்ள முடியும்.

proportion : வீத அளவு.

proportional font : சரிவிகித எழுத்துரு : ஒரு குறிப்பிட்ட பாணியில், அளவில் உருவாக்கப்பட்ட எழுத்துரு வகை. இதில் ஒவ்வொரு எழுத்தும் எண்ணும் வெவ்வேறு அகலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக இவ்வகை எழுத்துருவில் i என்னும் எழுத்தின் அகலம் m என்ற எழுத்தின் அகலத்தைவிடக் குறைவு.

proportional printing : விகிதாச்சார அச்சில் : ஒவ்வொரு எழுத்துக்கும் இடைவெளி இடம் அதன் அகலத்தை ஒட்டிய விகிதத்தில் இருக்குமாறு அச்சிடுதல். பெரிய எழுத்து w-வானது சிறிய எழுத்து 'i'யைவிட அதிக இடத்தை எடுத்துக் கொள்ளும்.

proportional spacing : வீத அளவு இட வெளியிடல் : ஒர் அச்செழுத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடை நிலை இட வெளி, அந்த எழுத்தின் அகலத்திற்கொப்ப இருக்குமானால் இடவெளியிடல் வீத அளவில் இருப்பதாகக் கருதப்படும். இந்த நூலிலுள்ள அச்சுக்கோப்பு வீத அளவு இடவெளியிடல் அடிப்படையில் அமைந்திருப்பதால், "Write" என்ற சொல்லிலுள்ள "W" என்னும் எழுத்து 'i' என்ற எழுத்தைவிட அதிக இடத்தை அடைத்துக் கொள்கிறது. இதற்கு மாறாக தர அளவுபடுத்திய தட்டச்சுப் பொறிமுறையில், எல்லா எழுத்துகளுக்கும் சரிசமமான இடவெளியே ஒதுக்கப்படுகிறது.

proposition : முற்கோள் : தருக்கமுறையில் ஒரு முன்மொழிவு. இது மெய்ம்மையாகவும் இருக்கலாம்; பொய்ம்மையாகவும் இருக்கலாம்.

proprietary : தனியுரிமையுடைய.

proprietary software : தனியுரிமை மென்பொருள் : ஒரு தனிமனிதருக்கு அல்லது வணிக நிறுவனத்திற்குச் சொந்தமான செயல்முறை. இது பதிப்புரிமை