பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pseudocomputer

1186

pseudorandom number



தொகுப்பு. இயக்கப்படுவதற்கு இது மேலும் தொகுக்கப்பட வேண்டும் அல்லது விளக்கப் பட வேண்டும்.

pseudocomputer : போலிக் கணினி : ஒரு மரபான நுண் செய்முறைப் படுத்தியின் தாயக எந்திர மொழியில் எழுதப்பட்டுள்ள மென்பொருள் மொழியாக்கச் செயல் முறை.

pseudolanguage : போலி மொழி : ஒரு கணினியினால் நேரடி யாகப் புரிந்து கொள்ள முடியாத மொழி; இது கணினிச் செயல் முறைகளை எழுதப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு போலிச் செயல்முறையைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அது, கணினி அறிந்து கொள்ளக்கூடிய ஒரு மொழியில் (எந்திர மொழி), மொழி பெயர்க்கப் பட வேண்டும். இது "குறியீட்டு மொழி" (symbolic language) போன்றது.

pseudo machine : போலிப் பொறி; போலி எந்திரம் : இவ்வகைப் பொறியில் நுண்செயலி வன்பொருளாக இருப்பதில்லை. மென்பொருளிலேயே அதுபோல உருவாக்கப்படுகிறது. போலிப் பொறிக்காக எழுதப்பட்ட ஒரு நிரலை மறுமொழி மாற்றம் செய்யாமலே வெவ்வேறு பணித்தளங்களில் இயக்க முடியும். எடுத்துக் காட்டாக, ஜாவா மெய்நிகர் பொறியைக் (Java Virtual Machine-JVM) கூறலாம். ஓரு முறை பைட் குறிமுறையாக (Bytecode) மொழிமாற்றம் செய்யப்பட்ட ஜாவா புரோ கிராம்களை (class கோப்புகள்) எந்தக் கணினியிலுள்ள ஜேவி எம்மிலும், மறுமொழி மாற்றம் செய்யாமலே இயக்க முடியும்.

pseudo-operation : போலிச் செயற்பாடு : கணினியின் செயற்பாட்டுத் தொகுதியாக வன்பொருளால் உணர்ந்தறியப்பட்டுள்ள தொகுதியின் ஒரு பகுதியாக இல்லாத செயற்பாடு. எனவே, இது எந்திரச் செயற்பாடுகளின் தொகுதியின் ஒரு விரிவாக்கம் ஆகும்.

pseudo random : போலி முறையிலா.

pseudorandom number : தொடர்பிலாப் போலி எண் ; போலி முறையிலா எண் : ஒரு நியதிவாத முறைப்படி ஒரு கணினியினால் உருவாக்கப்படும் எண். இந்த எண்கள் குறிப்பின்றிச் செய்யப்படும் பல புள்ளியியல் சோதனைகளுக்கு உள்ளாக்கப் படுகின்றன. பெரும்பாலான நடைமுறை நோக்கங்களுக்காக இதனை ஒரு குறிப்பிலா எண்ணாகப் பயன்படுத்தலாம்.